குத்து சண்டை போட்டி: மெக்கிரிகோரை வீழ்த்தி பிளாய்ட் மேவெதர் வெற்றி

Last Updated : Aug 27, 2017, 12:44 PM IST
குத்து சண்டை போட்டி: மெக்கிரிகோரை வீழ்த்தி பிளாய்ட் மேவெதர் வெற்றி title=

அமெரிக்காவில் தொழில் முறை குத்து சண்டை வீரர்களில் புகழ் பெற்ற பிளாய்ட் மேவெதர் கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருந்து திரும்பி வந்த நிலையில் இவர் அயர்லாந்தின் மெக் கிரிகோர் உடன் குத்து சண்டை போட்டியில் விளையாடினார்.

இந்த போட்டியில் இவர் 10வது சுற்றின் முடிவில் மெக்கிரிகோரை வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். 

இதனால் பிரபல குத்து சண்டை வீரரான ராக்கி மார்சியானோவை விட ஒரு வெற்றி அதிகம் பெற்று 50-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றார்.

Trending News