COVID-19: எதிரணி அல்லது referee அருகில் சென்று கால்பந்து வீரர்கள் இருமினால் Red card

எதிரணியினர் அல்லது போட்டி நடுவருக்கு அருகில் சென்று வேண்டுமென்றே இருமினால், கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் அட்டைகளைக் காட்டப்படலாம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 10:21 AM IST
COVID-19: எதிரணி அல்லது referee அருகில் சென்று கால்பந்து வீரர்கள் இருமினால் Red card title=

 

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் (FA) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எதிரணியினர் அல்லது போட்டி நடுவருக்கு அருகில் சென்று வேண்டுமென்றே இருமினால், கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் அட்டைகளைக் காட்டப்படலாம்.

COVID-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், போட்டிகளுக்குப் பொறுப்பேற்கும் நடுவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விளையாட்டின் அனைத்து மட்டங்களிலும் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

"ஒரு கால்பந்து வீரர் வேண்டுமென்றே இருமி மற்றவருக்கு பாதிப்பு ஏற்படுத்த நினைத்தால், உடனே referee உறுதிஅயன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நெருங்கிச் சென்று எதிரணியினரின் முகத்தில் அல்லது நடுவரின் அருகில் சென்று இருமுவது குற்றம் என்ற பட்டியலில் சேர்க்கப்படும்" என்று FA கால்பந்து நடுவர்களுக்கு அனுப்பிய வழிகாட்டு நெறிமுறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.   "தாக்குதல், அவமதிக்கும் அல்லது தவறான மொழி மற்றும் / அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல்" என்ற விதியின் கீழ் ஒரு வீரரை போட்டி அதிகாரி கண்டிக்கலாம்.

"விளையாட்டில் இருந்து வெளியே அனுப்பும் அளவுக்கு கடுமையானதாக குற்றமாக இல்லாவிட்டால், இந்த நடத்தைக்கு எச்சரிக்கை விடுக்கப்படலாம், விளையாட்டுக்கு மரியாதை கொடுக்காத்தைக் காட்டும் செயலாக இது பார்க்கப்படுகிறது'.

Read Also | IPL 2020 செப்டம்பர் 19 முதல் தொடங்கும், இறுதிப் போட்டி எப்பொது தெரியுமா?

இயல்பாக வீரர்கள் தரையில் துப்புவதற்கு கடுமை காட்ட வேண்டியதில்லை என்றும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு முக்கிய ஐரோப்பிய லீக்குகளில் பல வீரர்களின் தவறான நடத்தையை கேள்விக்குள்ளாக்கும். ஏனென்றால், கால்பந்து வீரர்கள் அவ்வப்போது ஆடுகளத்தில் துப்புவதைக் காண முடியும்.  

கோவிட் -19 தொற்றுநோயால் கால்பந்து போட்டிகள் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், Atletico Madrid forward Diego Costa அணி, UEFA சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்பெயினின் Liverpool அணியை தோற்கடித்த பின்னர், ஊடகவியலாளர்கள் அருகே வந்து வேண்டுமென்றே இருமியது குறிப்பிடத்தக்கது.  

Trending News