புதுடெல்லி: IPL 2020 (LIPL 2020) செப்டம்பர் 19 முதல் தொடங்கும். இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும். இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகக் குழு சீன நிறுவனங்கள் உட்பட டி 20 போட்டிக்கான அனைத்து ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது.
கோவிட் -19 இன் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஐ.பி.எல் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டது. சர்வதேச நிலையில் சுகாதார பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலைகள் காரணமாக, வீரர்களை மாற்றுவதற்கும் அனுமதி கொடுக்கப்படும். எவ்வளவு வீரர்களை மாற்றலாம் என்பதற்கான உச்சவரம்பு ஏதும் இல்லை.
இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகக் குழு, ஞாயிற்றுக்கிழமை சீன மொபைல் நிறுவனமான விவோ (Vivo)உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டது. இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கோவிட் -19 காரணமாக வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு உச்சவரம்பு ஏதும் இல்லை. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை போட்டிகள் நடத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாகக்குழு, (IPL Governing Council (GC) virtual' (மெய்நிகர்) கூட்டத்தில் முடிவு செய்தது.
ஜூன் மாதத்தில், கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன இராணுவத்திற்கு இடையிலான மோதலுக்குப் பிறகு சீனாவின் ஸ்பான்சர்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியானது. போட்டி நடத்தும் ஸ்பான்சர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதாக பி.சி.சி.ஐ பின்னர் உறுதியளித்தது. அதேபோல், ஐ.பி.எல்.ஜிசியும் மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கும் ஒப்புதல் அளித்தது. இது குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்தார்.
"ஒரு வாரத்திற்குள் உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சகங்களில் இருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம். இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளி வாரத்தில் நடைபெறும் என்பதால் இது ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாக அமையும்" என்று ஜி.சி குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது, தற்போதைய கடினமான பொருளாதார சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, இவ்வளவு குறுகிய காலத்தில் புதிய ஸ்பான்சர்களை பெறுவது கடினமாக இருக்கும்.