ஐபிஎல் 2022 தொடரின் 67வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் பெங்களூரு அணி களமிறங்கியது. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், சம்பிரதாயமாக இந்த லீக்கை எதிர்கொண்டது. டாஸ் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் தேர்வு செய்தார். இதன் மூலம் முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய அம்பயர்! கடுப்பாகி பேட்டை உடைத்த மேத்யூ வேட்!
கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். இந்த தொடர் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்ததுள்ளது. 47 பந்துகளில் 62 ரன்கள் விளாசிய அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து சஹா 31 ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும் விளாசினர். சற்று கடினமான இலக்காக இருந்தாலும், விராட் கோலி மற்றும் பாப் டூபிளசிஸ் ஆகியோர் இலக்கை வென்றே தீருவோம் என களமிறங்கினர்.
அதற்கேற்ப நிதானமாக விளையாடினர். தொடர் முழுவதும் ஃபார்ம் அவுட்டில் தட்டுத் தடுமாறிய கோலி, இந்த போட்டியில் பழைய ஃபார்முக்கு திரும்பினார். 54 பந்துகளை எதிர்கொண்ட அவர் 74 ரன்கள் விளாசி ஆர்சிபியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். டூபிளசிஸ் 44 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல் களமிறங்கி வாணவேடிக்கை காட்டினார்.
18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 40 ரன்கள் விளாச, ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் பிளே ஆஃப் சுற்றுக்கான கனவையும் தகர்த்துவிட்டது. இவ்வளவு நாள் ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலி, எங்களுடைய வாய்ப்பை வீண்டிக்கவா ஃபார்முக்கு வர வேண்டும் என கொஞ்சமாக கோபத்தையும் அள்ளி வீசியுள்ளனர். இருப்பினும், கோலி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | நா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! கோலியின் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR