Holocaust சர்ச்சை: ஒலிம்பிக் போட்டி துவக்கவிழா இயக்குநர் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, தொடக்க விழா நிகழ்ச்சிகளின் இயக்குநர் நீக்கப்பட்டுள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2021, 02:02 PM IST
  • ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை முறைப்படி தொடங்குகிறது
  • டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது
  • தொடக்க விழா நிகழ்ச்சிகளின் இயக்குநர் நீக்கப்பட்டுள்ளார்
Holocaust சர்ச்சை: ஒலிம்பிக் போட்டி துவக்கவிழா இயக்குநர் வெளியேற்றம் title=

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை முறைப்படி தொடங்குகிறது. கடந்த ஆண்டே நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நடைபெறவிருக்கிறது. 

கோவிட் பரவலை முன்னிட்டு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. தடுப்பூசி போட்டு, கொரோனாவுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை பெற்றிருந்தாலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

டோக்கியாவுக்கு வரும் சர்வதேச அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய பிளேபுக் வழிகாட்டுதல்களைப் (Playbook guidelines) பின்பற்றுவார்கள். டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, தொடக்க விழா நிகழ்ச்சிகளின் இயக்குநர் நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இயக்குனரான கென்டாரோ கோபயாஷி (Kentaro Kobayashi), ஹோலோகாஸ்ட் (Holocaust) குறித்து கடந்தகாலத்தில் கூறிய சில கருத்துக்களுக்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு தெரிவித்துள்ள்து.   

ALSO READ | Tokyo Olympics:விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

1998 ஆம் ஆண்டில் நகைச்சுவை திரைக்கதை கொண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் நடித்த கோபயாஷி நாஜிக்கள் 6 மில்லியன் யூதர்களைக் படுகொலை செய்ததை பற்றி குறிப்பிடும்போது, "ஹோலோகாஸ்ட் விளையாடுவோம்" என்று வசனம் பேசியிருந்தார்.

அப்போதே கோபயாஷியின் கருத்துக்களுக்கு உடனடியாக கண்டனங்கள் வந்து குவிந்தன. இது யூத எதிர்ப்பு நகைச்சுவை என்று Simon Wiesenthal Center விமர்சித்தது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய டோக்கியோ 2020 தலைவர் சீகோ ஹாஷிமோடோ, கடந்த காலத்தில் ஒரு சோகத்தை கேலி செய்த தவறுக்காக கென்டாரோ கோபயாஷி பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று கூறினார்.

இதற்கிடையில், புதன்கிழமை, டோக்கியோவில் COVID-19 நோய்த்தொற்றுகள் கடந்த ஆறு மாதத்தில் மிகவும் அதிகமாக 1,832 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த கொரோனா பாதிப்பு அதிகரிப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.  

டோக்கியோவில் தற்போது எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது, இது ஆகஸ்ட் 22 வரை நீடிக்கும் ஒலிம்பிக் போட்டிகள் நாளை (ஜூலை 23, வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி முடிவடையும். அதன்பிறகு பாராலிம்க்ஸ் போட்டிகள் நடைபெறும். 

ALSO READ | 'Anti-sex' beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News