ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையை ICC இன்று வெளியிட்டது
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு உலக கோப்பை போட்டிகள் என்ற நடைமுறை இருந்துவந்த நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு t20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ICC 2007-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கோப்பையிலேயே இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து, 2012-ஆம் ஆண்டு வெஸ்ட்இண்டீசும், 2014-ஆம் ஆண்டு இலங்கையும், 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெற்ற t20 உலக கோப்பை போட்டிக்கு பின்னர், 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அடுத்த t20 உலக கோப்பை தொடரை நடத்த ICC திட்டமிட்டது.
ஆனால் 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ICC சாம்பியன்ஸ் ட்ரோப்பி போட்டிக்கு பின்னர், அடுத்த t20 உலக கோப்பை தொடர் 2020-ஆம் ஆண்டு t20 உலக கோப்பை நடைப்பெறும் எனவும், இப்போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் ICC அறிவித்தது.
அதன்படி 7-வது t20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ஆம் நாள் முதல் நவம்பர் 15-ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.
உலககோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளில் ஆஸ்திரேலியா அணியை தவிர, ICC தரவரிசையில் அடிப்படையில் மீதமுள்ள 9 அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 10 அணிகளில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 போட்டிகளில் நேரடியாக விளையாடுவர், மீதமுள்ள இரண்டு அணி தேர்வு சுற்றில் பங்கேற்று வரும் அணிகளுடன் விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி பயணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் சாம்பியனான இலங்கை, வங்கதேச அணிகள் குவாளிப்பையர் 6-ல் பங்கேற்று சூப்பர் 12-க்கு முன்னேறுவர்.
மேலும் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறாமல், இரண்டு வெவ்வேறு பிரிவில் இடம்பெற்று விளையாடுகின்றன. இதன் காரணமாக வரும் உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதாமல் இருக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிரிவு வாரியாக அணிகள் விவரம்...
- ‘A’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தகுதிபெறும் அணிகள்.
- ‘B’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதிபெறும் அணிகள்.
இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்:
- அக்டோபர் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா.
- அக்டோபர் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2).
- நவம்பர் 1 : இந்தியா- இங்கிலாந்து.
- நவம்பர் 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1)
- நவம்பர் 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.