டி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு எப்போது போட்டி...? - முழு அட்டவணை

ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த சூப்பர் 8 சுற்றின் முழு அட்டவணையை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2024, 02:45 PM IST
  • 8 அணிகளும் தகுதிபெற்றுவிட்டன.
  • இன்னும் 2 குரூப் சுற்று போட்டிகள் மீதம் உள்ளன.
  • ஜூன் 19ஆம் தேதி சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு எப்போது போட்டி...? - முழு அட்டவணை title=

ICC T20 World Cup 2024 Super 8 Round Full Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2024 (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு 8 அணிகளும் தயாராகிவிட்டன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அணி ஒரு பிரிவில் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 8 சுற்று முடிவில் பிரிவின் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும்.

குருப் பிரிவில் மொத்தம் 20 அணிகள் மோதிய நிலையில் 8 அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 12 அணிகள் வெளியேறியிருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா 7 புள்ளிகளுடனும் மற்றும் அமெரிக்கா 5 புள்ளிகளுடனும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கின்றன. பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேறின. 

மீதம் உள்ள 2 போட்டிகள்

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 5 புள்ளிகளுடனும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா 8 புள்ளிகளுடனும், வங்கதேசம் 6 புள்ளிகளுடனும் அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளன. இலங்கை, நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன.

மேலும் படிக்க | ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஷுப்மான் கில்! இதுதான் உண்மையான காரணமா?

குரூப் சி பிரிவில் மட்டும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகளும், நாளை காலை 6 மணிக்கு ஆப்கானிஸ்தான் - மேற்கு இந்திய தீவுகள் அணிகளும் மோதுகின்றன. இருப்பினும் இந்த குரூப்பில் ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஏற்கெனவே 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இன்று வெற்றி பெறும் அணி 8 புள்ளிகளை பெறும்.

சூப்பர் 8 பிரிவுகள்...

அந்த வகையில், சூப்பர் 8 சுற்று குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா (A1), ஆஸ்திரேலியா (B2), ஆப்கானிஸ்தான் (C1), வங்கதேசம் (D2) ஆகிய நான்கு அணிகள் குரூப் 1 பிரிவிலும், அமெரிக்கா (A2), இங்கிலாந்து (B1), மேற்கு இந்திய தீவுகள் (C2), தென்னாப்பிரிக்கா (D1) ஆகிய நான்கு அணிகள் குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகள், எப்போது, எந்த மைதானங்களில் போட்டியிட உள்ளன என்பது குறித்து இதில் காணலாம். 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பையில் தோல்வி! சம்பள பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் நீக்கம்!

சூப்பர் 8 சுற்று அட்டவணை (இந்திய நேரப்படி)

ஜூன் 19: அமெரிக்கா vs தென்னாப்பிரிக்கா - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா [இரவு 8 மணி]

ஜூன் 20: இங்கிலாந்து vs மேற்கு இந்திய தீவுகள் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம்,  செயின்ட் லூசியா [அதிகாலை 6 மணி]

ஜூன் 20: ஆப்கானிஸ்தான் vs இந்தியா - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ் [இரவு 8 மணி]

ஜூன் 21: ஆஸ்திரேலியா vs வங்கதேசம் - விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா  [அதிகாலை 6 மணி]

ஜூன் 21: இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம்,  செயின்ட் லூசியா [இரவு 8 மணி]

ஜூன் 22: அமெரிக்கா vs மேற்கு இந்திய தீவுகள் - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ் [அதிகாலை 6 மணி]

ஜூன் 22: இந்தியா vs வங்கதேசம் - விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா [இரவு 8 மணி]

ஜூன் 23: ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - அர்னோஸ் வேல் மைதானம், கிங்ஸ்டவுன், செயின்ட் வின்சென்ட், [அதிகாலை 6 மணி]

ஜூன் 23: அமெரிக்கா vs இங்கிலாந்து - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ் [இரவு 8 மணி]

ஜூன் 24: மேற்கு இந்திய தீவுகள் vs தென்னாப்பிரிக்கா - விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா [அதிகாலை 6 மணி]

ஜுன் 24: ஆஸ்திரேலியா vs இந்தியா, டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம்,  செயின்ட் லூசியா [இரவு 8 மணி]

ஜூன் 25: ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம், அர்னோஸ் வேல் மைதானம், கிங்ஸ்டவுன், செயின்ட் வின்சென்ட், [அதிகாலை 6 மணி]

மேலும் படிக்க | IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News