ICC எச்சரிக்கை.. தோனி இருக்கும் போது லைன் தாண்டி யாரும் வெளியே செல்லாதீர்கள்

தோனி ஸ்டம்பின் பின்னால் இருக்கும் போது யாரும் வெளியே செல்லாதீர்கள் என ஐசிசி எச்சரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2019, 05:35 PM IST
ICC எச்சரிக்கை.. தோனி இருக்கும் போது லைன் தாண்டி யாரும் வெளியே செல்லாதீர்கள் title=

நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதுவும் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வெலிங்டன் வெஸ்ட்பாக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியான ஐந்தாவது ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி செய்த அசத்தலான ரன் அவுட்டால் இந்தியா வெற்றி பெற்றதில் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அம்பதிராயுடு 90, விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்தனர்.

பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஒருகட்டத்தில் விக்கெட் இழந்து தடுமாறியது. ஆனால் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் அதிரடியாகவும் நன்றாகவும் ஆடினார். அவரின் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று விடும் என்ற சூழ்நிலையை உருவாகினார்.  நீஷம் 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த போது, இந்திய வீரர் கேதர் ஜாதவ் வீசிய பந்தை எதிர்கொண்டார். அந்த பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பிற்கு பின்னே சென்றது. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டுக்கொண்டு இருக்கும் போது, பந்தை கைப்பற்றிய தல தோனி ஸ்டம்பை நோக்கி சரியாக அடித்தார். தோனியின் செயலால் அதிரடியாக ஆடி வந்த ஜேம்ஸ் நீஷம் ரன்-அவுட் ஆனார். நீஷம் அவுட் ஆனதால், அதன் பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பரிக்கொடுக்க நியூசிலாந்து அணி 217 ரன்னில் சரணடைந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

 

எம்.எஸ். தோனியின் அசத்தலான ரன்-அவுட்டை பெருமை படுத்தி உள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ICC தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி ஸ்டம்பின் பின்னால் இருக்கும் போது யாரும் வெளியே செல்லாதீர்கள் எனக்கூறி மற்ற வீரர்களை எச்சரித்து அறிவுரை கூறியுள்ளது ஐசிசி.

Trending News