உலகக்கோப்பை 2019: அரையிறுதிக்குள் நுழைய இருக்கும் 4வது அணி எது?

4வது இடத்திற்கு எந்த அணி வாய்ப்பை பெரும் என்று சற்று ஆராய்வோம்...!! 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2019, 09:21 PM IST
உலகக்கோப்பை 2019: அரையிறுதிக்குள் நுழைய இருக்கும் 4வது அணி எது? title=

புதுடில்லி: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை 39 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று 40 வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர், இந்த 2019 உலக கோப்பை போட்டி தொடர் தான் ராபின் ரவுண்ட் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. இதில் அனைத்து அணிகளும் ஒருவரோடு ஒருவர் ஒரு முறை போட்டியிடுவார்கள். அதாவது, ஒவ்வொரு அணி 9 லீக் போட்டிகளில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப்போட்டிக்கு செல்லும். இதில் வெற்றி பெரும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 14 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியா மீதமிருக்கும் இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் நாக்கவுட் சுற்றுக்கு வாய்ப்பு உறுதியாகி விடும். நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து அணியுடனான ஒரு போட்டி உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். தோற்கும் அணியின் நிலைமை மற்ற அணியின் வெற்றி வாய்ப்பை பொறுத்தே அமையும். 

தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன. இதன் அடிப்படையில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று பார்ப்போம்!!

ஏற்கனவே ஆஸ்திரேலியா நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்தியாவுக்கு மீதமிருக்கும் இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் நாக்கவுட் சுற்றுக்கு முன்னேறி விடும்.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

பாகிஸ்தான் அணி ஜூலை 5 ஆம் தேதி நடைபெற உள்ள வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் நியூசிலாந்து vs இங்கிலாந்து போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற வேண்டும்.

இன்று நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி வெற்றிபெற வேண்டும். அதேபோல் பாக்கிஸ்தானிற்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெற வேண்டும். நியூசிலாந்து vs இங்கிலாந்து போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற வேண்டும்.

நான்காவது இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இன்று வங்கதேசம் அணி தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். 4வது இடத்திற்கு எந்த அணி வாய்ப்பை பெரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News