3-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா 193/2

இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார். 

Last Updated : Mar 18, 2017, 11:51 AM IST
3-வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்தியா 193/2 title=

ராஞ்சி: இந்திய ஆஸ்திரேலியா-வின் 3-வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன் விளாசினார். 

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் 

இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 16-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 50 ரன்கள் இருக்கும் போது ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். அடுத்தடுத்து விக்கெட் விழ 5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். முதல் நாளில் ஸ்மித் சிறப்பாக விளையாடி 244 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தனர். 

இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்துள்ளது. ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் 117 ரன், மேக்ஸ்வெல் 82 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்த மேக்ஸ்வெல் 104 ரன் எடுத்து (185 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் பிடிபட்டார்.

மூன்றாவது நாளன இன்று விஜய் 82 ரன் எடுத்து அவுட் புஜாரா 40 விளடியாடி வருகிறார். 

மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க தவறினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் 178 ரன்னுடன் (361 பந்து, 17 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 5, உமேஷ் 3, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்துள்ளது. 

மூன்றாவது நாளன இன்று இந்தியா அணி விஜய் 53 ரன்களும் பூஜாரா 19 ரன்கள் எடுத்து  விளையாடி வருகின்றனர்.

Trending News