IND vs AUS: சனிக்கிழமையன்று நாக்பூரில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, பார்டர்-கவாஸ்கர் டிராபியை சிறப்பாகத் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 400 ரன்களைக் குவித்தது நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது டெஸ்ட் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், ரஞ்சி இறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாட ஜெய்தேவ் உனட்கட்டை விடுவித்து, அணியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை டீம் இந்தியா செய்துள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் திருமணம் செய்ய உள்ள ஹர்திக் பாண்டியா! ஏன் தெரியுமா?
இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இந்திய பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து விடுபெற பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) இன்னும் இருக்கிறார். நியூசிலாந்து ODI தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. பயிற்சியாளர் எஸ் ரஜினிகாந்தின் கண்காணிப்பின் கீழ் அவர் NCAல் பயிற்சி பெற்ற சில வீடியோக்களை ஐயர் பகிர்ந்துள்ளார். எனவே, இந்த தொடர் முழுவதும் அவர் இடம் பெறாமல் இருக்கலாம்.
ரஞ்சி டிராபி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஐயர் தனது உடற்தகுதியை நிரூபிக்க மார்ச் 1-5 வரை நடைபெறும் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும்படி கேட்கப்படலாம். முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா, பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய முகாமில் சேர்வதற்கு முன்பு தமிழ்நாடு அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடினார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (C), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத் (WK), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷுப்மான் கில், இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ்
மேலும் படிக்க | IPL அணிகள் ஏலத்தை மிஞ்சிய WPL... மகளிர் அணிகளின் ஏலத்தொகை முழு விவரம்!