இந்தியா அணி தனது நீண்ட டெஸ்ட் சீசனை வரும் செப்டம்பர் 19ம் தேதியுடன் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உட்பட இந்திய அணி மொத்தம் 10 போட்டிகளில் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சென்னையில் வரும் வியாழக்கிழமை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை. பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் மண்ணில் அவர்களை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று திரும்புகிறது. எனவே இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த வாரம் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
மேலும் படிக்க | டெஸ்ட் போட்டியில் சேப்பாக்கத்தில் விராட் கோலி கிங் ஹா? இல்லையா?
இந்த தொடரில் இந்திய அணி எந்த பிளேயிங் 11 அணியுடன் விளையாடும் என்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். காரணம் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் தொடர் நடைபெற உள்ளதால் வேகப்பந்து வீச்சாளர்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். மேலும் சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் ஸ்பின்னர்களுக்கு அதிகம் உதவும் என்பதால் இந்தியா 3 ஸ்பின்னர் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற துலீப் டிராபியிலும் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்படலாம்.
இருப்பினும் கடந்த டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா பெரிதாக பந்துவீசவில்லை. மொத்தமே 19 ஓவர்கள் மட்டுமே வீசிய இருந்தார். எனவே ஜடேஜாவிற்கு பதில் அக்சர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவின் ஹீரோவாக இருந்தார் அக்சர். அதே போல இந்த மாதம் நடைபெற்ற துலீப் டிராபியிலும் சிறப்பாக விளையாடி அசத்தி இருந்தார். இருப்பினும் தற்போது வெளியான தகவலின்படி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் செல்ல திட்டம் வைத்துள்ளனர்.
ரிஷப் பந்த் vs துருவ் ஜூரல்
ரிஷப் பந்த் இல்லாத சமயத்தில் இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் விளையாடினார். இருப்பினும் அவரால் அந்த இடத்தை நிர்ப்ப முடியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடி இருந்தார். ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர் என்ற விருதும் பெற்றார். இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரிஷப் பந்த் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். 2022 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்திற்கு பிறகு விளையாடவில்லை. மேலும் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் அல்லது சர்ஃபராஸ் கான் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | ஆப்கானிஸ்தானில் அனைத்து வகை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கும் தலிபான்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ