128 ரன்கள் அடித்தால் போதும்! விராட் கோலி செய்யப்போகும் மகத்தான சாதனை!

India vs Sri Lanka 2nd ODI: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதில் கோலி இரண்டு உலக சாதனைகளை செய்ய முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 4, 2024, 01:37 PM IST
  • சச்சின் டெண்டுல்கரின் 2 உலக சாதனை.
  • விராட் கோலி 2வது போட்டியில் முறியடிக்க முடியும்.
  • இதற்கு 128 ரன்கள் மட்டுமே தேவை.
128 ரன்கள் அடித்தால் போதும்! விராட் கோலி செய்யப்போகும் மகத்தான சாதனை! title=

India vs Sri Lanka 2nd ODI: ஞாயிற்றுக்கிழமை இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்து இருந்தது. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த தொடரில் களமிறங்கி உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்குகி 24 ரன்கள் எடுத்து இருந்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி இரண்டு மகத்தான சாதனைகளை செய்ய உள்ளார். இந்த போட்டியில் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் மிக வேகமாக 14,000 ரன்களைக் கடந்த வரலாற்று சாதனையை படைக்க முடியும்.

மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் - சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!

 

 

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தம்புல்லாவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். இதுவரை 293 போட்டிகளில் விளையாடி 13,872 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. 14,000 ரன்களைக் அடிக்க இன்னும் 128 ரன்கள் மட்டுமே தேவை. ஞாயிற்றுக்கிழமை இன்று இந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்தினால் சச்சின் டெண்டுல்கரின் 18 ஆண்டுகால சாதனையை முறியடிக்க முடியும். பெஷாவரில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது 359வது போட்டியில் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை அடித்து சாதனை படைத்தார். இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 359 போட்டிகள் (350 இன்னிங்ஸ்)
குமார் சங்கக்கார (இலங்கை) – 402 போட்டிகள் (378 இன்னிங்ஸ்)

சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே சமயம் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்கார 14,234 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி இருந்தார். அந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடி மொத்தம் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (13,704) மற்றும் இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் (13,704) சாதனைகளை முறியடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 18,426
  • குமார் சங்கக்கார (இலங்கை) – 14,234
  • விராட் கோலி (இந்தியா) – 13,872
  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13,704
  • சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 13,430

ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை அடிப்பது தவிர சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை எடுத்த உலகின் நான்காவது பேட்டர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற உள்ளார். தற்போது கோலி இந்தியாவுக்காக மொத்தமாக 531 போட்டிகளில் விளையாடி 26,908 ரன்கள் அடித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 34,357
  • குமார் சங்கக்கார (இலங்கை) – 28,016
  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 27,483
  • விராட் கோலி (இந்தியா) – 26,908
  • மஹேல ஜெயவர்தன (இலங்கை, ஆசியா) – 25,957

மேலும் படிக்க | ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைக்க தோனிதான் காரணமா? - சுவப்னில் சொல்லும் சீக்ரெட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News