வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்ர் கார்டென் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைப்பெற்றது. இப்போட்டி இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆகும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதிலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டத்தின் 30.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 106 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
This is #TeamIndia's 7 straight Test win in a row, which is our longest str #PinkBallTest @Paytm pic.twitter.com/Lt2168Qidn
— BCCI (@BCCI) November 24, 2019
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அணித்தலைவர் விராட் கோலி 136(194) ரன்கள் குவித்தார். புஜாரா 55(105), ரஹானே 51(69) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேசம் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தினையே வெளிப்படுத்தியது. எனினும் முஷ்பிகுர் ரஹீம் தனி மனிதனாக போராடி 74(96) ரன்கள் குவித்தார். எனினும் ஆட்டத்தின் 41.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணியால் 195 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் அதிரடியாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இஷாந்த சர்மா தனது பங்கிற்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச மட்டையாளர் மஹ்மதுல்லா 39(41) ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறி ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றயது.