நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா 2-வது வெற்றியைப் பெற்றுது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 154 ரன்களும், தோனி 80 ரன்களும் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தனர்.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. லாதம் (61), நீசம் (57), டெய்லர் (44) மற்றும் ஹென்றி (39) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
இந்திய கேப்டன் தோனி இந்த ஆட்டத்தில் 22 ரன்கள் எடுத்து சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ரன்கள் குவித்த 3-ஆவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.
ரோஹித் சர்மா (13), அஜிங்க்ய (5), விராட் கோலி (154), எம்.எஸ்.தோனி (80), மணீஷ் பாண்டே (28). இந்திய அணி 48.2 ஒவர்களில் 3 விக்கெட்டை இழந்து 289 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.