இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் பட்டியில்:-
வார்னர் - புவனேஸ்வர் பந்தில் அவுட்- 5 பந்தில் 8 ரன்கள்.
ஆரோன் பிஞ்ச் - குல்தீப் யாதவ் பந்தில் அவுட்- 30 பந்தில் 42 ரன்கள்.
க்ளென் மேக்ஸ்வெல் - 16 பந்தில் 17 ரன்களில் அவுட்.
ட்ராவிஸ் ஹெட் - 16 பந்தில் 9 ரன்கள் எடுத்து அவுட்.
ஹென்ரிக்ஸ் - 8 ரன்களில் அவுட்.
டானியல் - 13 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்.
பெய்ன் - 16 பந்தில் 17 ரன் எடுத்து அவுட்.
கவுல்டர்-நைல் - 2 பந்தில் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து மழை பெய்ததால் இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியின் ஸ்கோர் பட்டியில்:-
ரோஹித் சர்மா - 7 பந்தில் 11 ரன்கள்.
ஷிகர் தவான் - 12 பந்துகளில் 15 ரன்களுடனும்,
விராட் கோலி - 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி வருகிற 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.