4வது டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்தியா 153/2

Last Updated : Mar 26, 2017, 02:28 PM IST
4வது டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை இந்தியா 153/2 title=

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ரென்ஷா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு புதுமுக வீரரான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா திணறியது. ஆனாலும் கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 111 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் வடே அரைசதம் கடக்க அந்த அணி 300 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவர் மட்டும் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடை பெற்று வருகிறது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர்.

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சால் இருவரையும் மிரட்டினார்கள். ஸ்விங், கேரி, பவுன்ஸ் என தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்தார்கள். இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். ராகுல், புஜாரா ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 60 ரன்கள் எடுத்து ராகுல் ஆட்டம் இழந்தார். தற்போது தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பில் 153 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 19, புஜாரா 53 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

Trending News