மார்ச் 8ம் தேதி நடைபெறும் INDvAUS போட்டிக்கான டிக்கெட் ஆன்-லைனில் கிடைக்காது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயிலான 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் வாங்க முடியாது என அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2019, 07:00 PM IST
மார்ச் 8ம் தேதி நடைபெறும் INDvAUS போட்டிக்கான டிக்கெட் ஆன்-லைனில் கிடைக்காது title=

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி மார்ச் 8 அன்று ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியைக்கான கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக ஆர்வம் ஏற்ப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். JSCA இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

அதாவது, மார்ச் 8 அன்று இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவார். அதனால் அந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். 

ஆனால் JSCA ஸ்டேடியத்தில் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் ஒரு முக்கியமான அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் வாங்க முடியாது. நேரடியாக மைதானத்தின் கவுண்டரில் இருந்து தான் எடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைன்னில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் வேண்டும் என்றால் பல மணிநேரம் வரிசையில் வந்து நின்று வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

இதுக்குறித்து JSCA நிர்வாம் தரப்பில் கூறப்பட்டதாவது, இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட முக்கிய காரணம், ஜார்கண்ட் மக்களுக்கு அதிகபட்ச டிக்கெட் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆன்-லைன் டிக்கெட் மூலம் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக டிக்கெட்டுக்களை வாங்கிக்கொள்கிறார்கள். இதனால் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. 

தற்போதைய அறிவிப்பால், உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிக அளவில் டிக்கெட் வாங்குவார்கள். சட்டவிரோத டிக்கெட் விற்பனையை தடுக்க டிக்கெட் வாங்க வரும் ஆண் மற்றும் பெண்களின் வலது விரல்களிலும் மை வைக்கப்படும். இதன்மூலம் ப்ளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க முடியும் என்று கூறப்பட்டது.

JSCA ஸ்டேடியத்தில் ஏறக்குறைய 40 ஆயிரம் பார்வையாளர்கள் உட்காரக்கூடிய வசதி உள்ளது. மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி பகல்-இரவு ஆட்டமாக இருக்கும்.

Trending News