இரட்டை சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால்..!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்..!

Last Updated : Nov 15, 2019, 04:51 PM IST
இரட்டை சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால்..! title=

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்..!

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.

இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்தது. 43 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா, அரைசதம் அடித்த நிலையில், 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார்.

150 ரன்களை கடந்த பின்னர் மயங்க் அகர்வால் பேட்டை உயர்த்தி காட்டியதும், கோலி 200 ரன்கள் அடிக்குமாறு சைகை செய்தார். இதனை அடுத்து, தனது கட்டை விரலை உயர்த்தி அகர்வாலும் சைகை காட்டினார். தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. அகர்வால் 185 ரன்களுடனும், ஜடேஜா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  

அவரைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்...!!

தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக இரண்டு சதமும், வங்கதேச அணிக்கு எதிராக ஒரு சதமும் எடுத்துள்ளார். இவர் இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். முதல் முறையாக தென் ஆப்பரிக்ககாவுக்கு எதிராக 215 ரன்களும், இரண்டாவது இன்று விளையாடிய வங்கதேசத்திற்கு எதிராக 243 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல மூன்று அறைசதமும் அடித்துள்ளார். இவரின் அதிகபட்ச ரன்கள் 215 ஆகும். தற்போதைய நிலவரப்படி, இவரின் சராசரி 71.50 ஆகும். இதுவரை அவர் டெஸ்ட் போட்டியில் 858 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை 8 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் 12 இன்னிங்சில் களம் கண்டுள்ளார்.

வங்கதேசம vs இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் ஆரம்பமானது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் வீச்சு தேர்வு செய்தது. களம் இறங்கிய வங்கதேச அணி வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆட்டத்தின் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. 

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 112 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 467ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தற்போதை நிலவரப்படி இந்தியா வங்கதேச அணியை விட 317 ரன்கள் அதிகமாக எடுத்து உள்ளது. 4 விக்கெட் இந்தியாவின் கையில் இருக்கும் நிலையில், ஒரு வலுவான இலக்கினை வங்கதேச அணிக்கு இந்தியா நிர்ணயிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Trending News