நிதானமாக ஆடும் விராத் & கார்த்திக்!! 3ம் நாள் ஆட்டம் நிறைவு; வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றம் நாள் ஆட்டம் நிறைவடைந்து உள்ளது. இந்தியா வெற்றி பெற 84 ரன்கள் தேவை.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 3, 2018, 11:46 PM IST
நிதானமாக ஆடும் விராத் & கார்த்திக்!! 3ம் நாள் ஆட்டம் நிறைவு; வெற்றிக்கு 84 ரன்கள் தேவை title=

மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் இரண்டு விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குரான் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், நாளை நான்காவது நாள் ஆட்டம் ஆரம்பிக் உள்ளது. 

 

 


தடுமாறுகிறது இந்திய அணி 73 ரன்னுக்கு 5 விக்கெட் இழப்பு; வெற்றிக்கு தேவை 116


இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 13(24) ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது இந்திய அணி. தற்போது  இந்திய அணி கேப்டன் விராத் கோலி 24(37) மற்றும் அஜிங்கியா ரஹானே 2(7) ஆடி வருகின்றனர். 18 ஓவர் முடிவில் இந்திய அணி 59 ரன்கள் எடுத்து உள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை 


தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்து ஆடி வருகிறது. முரளி விஜய் 6 ரன்னிலும், ஷிகர் தவான் 13 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தற்போது இந்திய அணி கேப்டன் விராத் கோலி 12(22) மற்றும் லோகேஷ் ராகுல்13(20) ஆடி வருகின்றனர். இந்திய அணி 14 ஓவர்கள் விளையாடி 45 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 149 ரன்கள் தேவை 

 


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டியை அடுத்து தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பிரிமிக்ஹான் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸ் விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 76 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி 149(225) ரன்கள் குவித்து வெளியேறினார்.

 

இதனையடுத்து 13 ரன்கள் முன்னிலை பெற்று, தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது இங்கிலாந்து அணி. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. 

 

மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்தில் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் வீரர் சாம் குரானின் அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கடைசியாக இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் மற்றும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 193 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட உள்ளது.

 

Trending News