INDvsENG 5th Test: இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள்

5 வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 198/7 ரன்கள் எடுத்தது. குக் மற்றும் மொயின் அலி அரைசதம்.

Last Updated : Sep 8, 2018, 09:44 AM IST
INDvsENG 5th Test: இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள்  title=

5 வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 198/7 ரன்கள் எடுத்தது. குக் மற்றும் மொயின் அலி அரைசதம்.

இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தொடரில் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வழக்கம் போல டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து  அணியின் கேப்டன்  ஜோ ரூட்  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த துவக்க வீரர்கள் ஜென்னிங்ஸ் மற்றும் குக் இருவரும் நிதானமாக ஆடினர். 23 ரன்கள் இருக்கையில் ஜடேஜா பந்தில் ஜென்னிங்ஸ் வெளியேறினார். இதனையடுத்து, நன்றாக ஆடிவந்த குக் அரைசதம் கண்டார். முதல் 4 போட்டிகளில் மோசமாக ஆடிய குக், இந்த தொடரில் அடித்த முதக் அரைசதம் ஆகும்.

அவருக்கு மொயின் அலி பக்கபலமாக இருந்ததால் இந்திய பந்துவீச்சால் 1 விக்கெட் மட்டுமே எடுக்கப்பட்டது. தேநீர் இடைவேளை முடிந்த சில நிமிடங்களிலேயே குக் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரூட் சிறிதும் நிலைக்கவில்லை. ரூட் மற்றும் பைர்ஸ்டோவ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.

நான்காவது டெஸ்டில் சிறப்பாக ஆடிய சாம் கர்ரன் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஸ்டோக்ஸ் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 198/7 ரன்கள் எடுத்தது. ரஷீத் மற்றும் பட்லர் இருவரும் களத்தில் இருந்தனர்.

 

Trending News