INDvNZ: பயிற்ச்சி ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா அணி; ரசிகர்கள் ஏமாற்றம்

இன்று நடைபெற உள்ள பயிற்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்க்கொள்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 25, 2019, 04:57 PM IST
INDvNZ: பயிற்ச்சி ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா அணி; ரசிகர்கள் ஏமாற்றம் title=

16:51 25-05-2019
19.4 ஓவர் முடிவில் 81 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்தது இந்தியா அணி


டெல்லி/இங்கிலாந்து: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.

உலக கோப்பையில் பங்கேற்ப்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்ச்சி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சி ஆட்டம் மே 24 முதல் மே 28 வரை நடைபெறுகிறது.

உலக கோப்பையில் பங்கேற்க்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்று நடக்கவிருக்கும் பயிற்ச்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்க்கொள்கிறது. இந்த பயிற்ச்சி ஆட்டம் லண்டன் நகரில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதனத்தில் மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது.

உலகக் கோப்பைக்கு முன்பா இங்கிலாந்து ஆடுகளத்தில் பயிற்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆட உள்ளதால், விராட் தலைமையிலான இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது.

மற்றொரு பயிற்ச்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கும்.

இன்றைய பயிற்ச்சி ஆட்டம்:
3_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
4_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து

Trending News