3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி ஜோகனஸ்பெர்க்கில் இன்று தொடங்கியது. காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இப்போட்டியில் விளையாடவில்லை. ஹனுமா விஹாரி அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
ALSO READ | INDvsSA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகிய விராட் கோலி!
கோலி விலகியதால் கேப்டன் பொறுப்பை ஏற்ற கே.எல்.ராகுல் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் நிதானமாக ஆடினர். 26 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். கேப்டன் இன்னிங்ஸை விளையாடிய ராகுல் 50 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்த வந்த ரஹானே ரன் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். புஜாரா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி பரிதாபகரமான நிலையில் இருந்தது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய விஹாரி 20 ரன்களும், பன்ட் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் களமிறங்கிய அஸ்வின் சிறப்பாக விளையாடி 40 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா அணியில் ரபாடா மற்றும் ஆலிவர் தலா 3 விக்கெட்டுகளும், ஜேசன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
ALSO READ | புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR