10:55 PM 10/19/2020
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது.
10:45 PM 10/19/2020
ஜோஸ் பட்லர் (47) அரைசதத்தை நெருங்குகிறார், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (25 பந்து 15) எச்சரிக்கையுடன் பேட்டிங் செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இப்போது 36 பந்துகளில் 34 ரன்கள் தேவை. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர்: 92/3 (14 ஓவர்கள்)
10:10 PM 10/19/2020
சஞ்சு சாம்சன் அவுட்டாக, 6 மற்றும் 7வது ஓவர்களில் 12 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற இப்போது 78 பந்துகளில் 86 ரன்கள் தேவை. ஆர்.ஆர் 40/3 (7 ஓவர்கள்)
9:50 PM 10/19/2020
CSK நிர்ணயித்த 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா தலா 14 மற்றும் ஒரு ரன்கள் எடுத்து களத்தில் மட்டை வீசிக் கொண்டிருக்கின்றனர். 2 ஓவர்கள் முடிந்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் 20/2 என்ற நிலையில் உள்ளது.
9:20 PM 10/19/2020
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானுக்கு 126 ரன்கள் என்ற இலக்கைக் கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை சார்பாக ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். 30 பந்துகளில் 4 பவுண்டரிகளை அடித்தார். 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தது கேதார் ஜாதவ் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
8:40 PM 10/19/2020
சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர். சிஎஸ்கே 68/4 (12 ஓவர்கள்)
ராகுல் தெவதியாவின் 10 வது ஓவரின் கடைசி பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் அவுட்டானார்.19 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களில் அம்பதி ராயுடு அவுட்டானார்.
8:00 PM 10/19/2020
Faf du Plessis 10 ரன்களில் ஆட்டமிழந்தார். Shane Watson 8 ரன்களின் ஆட்டமிழந்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. CSK 26/2 (4 overs)
WATCH - Gloves off, Buttler ON - Super catch
Jos Buttler goes full stretch to grab a brilliant catch. Faf du Plessis walks back.https://t.co/n8M6cZ7WCZ #Dream11IPL
— IndianPremierLeague (@IPL) October 19, 2020
7:11 PM 10/19/2020
இரண்டு அணிகளிலும் விளையாடக்கூடிய 11 வீரர்களின் விவரங்கள்!
A look at the Playing XI for #CSKvRR #Dream11IPL pic.twitter.com/VNQssYAFRz
— IndianPremierLeague (@IPL) October 19, 2020
7:03 PM 10/19/2020
இன்றைய IPL 2020 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை மோத உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
"We'll bat first!" #WhistlePodu #WhistleFromHome #Yellove #CSKvRR
— Chennai Super Kings (@ChennaiIPL) October 19, 2020
புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 22 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சி.எஸ்.கே 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.பி.எல் 2020 போட்டித்தொடரின் 37வது போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் அரங்கில் இன்று மாலை 07.30 மணிக்கு தொடங்கும்.
மதிப்பெண் பட்டியலில் இந்த இரு அணிகளும் கடைசி இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் இருந்து தலா மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது. இதற்கு முன்பு டெல்லி கேபிடல்ஸுடனான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது சி.எஸ்.கே. இதற்கு முன்பு விராட் கோலியின் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, தனது அடுத்த போட்டியில் ஆர்.சி.பியை எதிர் கொள்ளவிருக்கிறது என்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவது, மதிப்பெண் பட்டியலில் சற்று முன்னேறுவதற்கு மட்டுமல்ல, அணியின் உற்சாகத்திற்கும் முக்கியமானது.
ஐ.பி.எல் 2020 போட்டித்தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய போட்டியில் எம்.எஸ். தோனியின் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் அணி, அந்த உத்வேகத்துடன் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளே-ஆஃப் (playoff) சுற்றுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையையும் இந்த போட்டியின் வெற்றி அணிகளுக்கு கொடுக்கும் என்பதால், இன்றைய போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும்.
இதற்கிடையில், இரு தரப்பு வீரர்களும் தங்கள் தனிப்பட்ட மைல்கற்களை அடைய முயற்சிப்பார்கள்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடும் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ் தோனி,200 வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அதோடு, இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால், ஐ.பி.எல் போட்டிகளில் 150 ஐ.பி.எல் பேரை ஆட்டமிழக்கச் செய்த பெருமையை பெறுவார் தல தோனி. அதுமட்டுமல்ல, இன்று ஆறு ரன்களை மட்டும் எடுத்தால், தனது ஐ.பி.எல் ரன் ஸ்கோரில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டுவார் சி.எஸ்.கே கேப்டன் தோனி.
தோனியின் சாதனைகளுக்கு மற்றுமொரு மைல்கல்லுக்கும் இன்று வாய்ப்பு உண்டு. இன்னும் இரண்டு ‘கேட்ச்’களை (catches) மட்டும் பிடித்தால், 50 ஐ.பி.எல் catch பிடித்த தல தோனி என்ற பட்டப்பெயரையும் பெறுவார்.
ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர் (Jos Buttler) இன்னும் நான்கு சிக்ஸர்கள் அடித்தால், ஐ.பி.எல் போட்டிகளில் 50 சிக்ஸர்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பதிவு செய்வார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மூன்று பவுண்டரி எடுத்தால், 100 ஐபிஎல் பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமை கிடைக்கும். அதேபோல், 21 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும், 1,000 ஐபிஎல் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
2010, 2011 மற்றும் 2018 என் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. ஆனால், 2008 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டும் ஐ.பி.எல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த ஐ.பி.எல் பட்டத்தை பெறுவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
இப்படி பல சாதனைகள் நடத்தப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்புகளுடன் இன்றைய ஐ.பி.எல் போட்டி அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
DC vs CSK அணிகளின் களம் இறங்கும் வீரர்களின் வரிசைக் கிரமம் இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: சாம் குர்ரான், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், கர்ன் ஷர்மா, லுங்கி என்ஜிடி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் தவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.
Read Also | IPL 2020 Match 35: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR