IPL 2020: இன்றைய இரண்டாவது போட்டியில் Mumbai Indians-ஐ எதிர்கொள்கிறது Kings XI Punjab

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2020) 13 வது சீசனின் 36 ஆவது போட்டியில், நடப்பு சாம்பியன்களும், நான்கு முறை பட்டத்தை வென்றுள்ள அணியுமான மும்பை இந்தியன்ஸ் (MI), கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மோதும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2020, 06:55 PM IST
  • ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் IPL 2020 புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப், இரண்டு வெற்றிகளைப் பெற்று, பட்டியலில் கீழே உள்ளது.
  • இரு அணிகளும் தங்களின் எட்டு விக்கெட் வெற்றிகளின் பின்னணியில் இந்த மோதலுக்கு தயாராகியுள்ளன.
IPL 2020: இன்றைய இரண்டாவது போட்டியில் Mumbai Indians-ஐ எதிர்கொள்கிறது Kings XI Punjab title=

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2020) 13 வது சீசனின் 36 ஆவது போட்டியில், நடப்பு சாம்பியன்களும், நான்கு முறை பட்டத்தை வென்றுள்ள அணியுமான மும்பை இந்தியன்ஸ் (MI), கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மோதும்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் IPL 2020 புள்ளிகள் அட்டவணையில் எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், கிங்ஸ் லெவன் பஞ்சாப், இரண்டு வெற்றிகளைப் பெற்று, பட்டியலில் கீழே உள்ளது.

இரு அணிகளும் தங்களின் எட்டு விக்கெட் வெற்றிகளின் பின்னணியில் இந்த மோதலுக்கு தயாராகியுள்ளன. குயின்டன் டி கோக்கின் அதிரடி 78 ரன்களால், மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எளிதில் வென்றது. பஞ்சாப் அணி விராட் கோலியின் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் இரு தரப்பினரும் இதற்கு முன்னர் மோதிக்கொண்ட போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 70 ரன்கள் எடுத்தார். கீரோன் பொல்லார்ட் (47 *), ஹார்திக் பாண்ட்யா (30 *) ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்தனர்.

மும்பை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றது. அதைத் தொடர MI அணி முயற்சிக்கும். ​​கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு எதிராக முந்தைய போட்டியில் தான் பெற்ற தோல்வியை ஒரு வெற்றியின் மூலம் ஈடு செய்ய நினைக்கும்.

இதுவரை இரு அணிகளும் மொத்தம் 25 போட்டிகளில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளன. இவற்றில் ரோஹித்தின் அணி 14 முறையும் ராகுலின் அணி 11 முறையும் வென்றுள்ளன.

இதற்கிடையில், துபாயில் (Dubai) நடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் மும்பை வென்றுள்ளது. மறுபுறம், கிங்ஸ் லெவன், இங்கு இதுவரை விளையாடிய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

மேட்ச் எப்போது?

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் ரசிகர்கள் இல்லாத நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியாக MI மற்றும் KXIP இடையேயான போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும்.

எங்கே பார்ப்பது?

இந்த போட்டி வ்ழக்கம் போல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். இதற்கிடையில், போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங் ஸ்டாரின் ஸ்ட்ரீமிங் செயல்பாடான ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கும்.

ALSO READ: CSK vs DC IPL 2020: அருமை.. நல்ல ஆட்டம்.. டெல்லியிடம் சென்னை படுதோல்வி

MI vs KXIP, ட்ரீம் 11 குழு கணிப்பு

விக்கெட் கீப்பர்: கே.எல்.ராகுல்

பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல்.

ஆல்ரவுண்டர்கள்: கீரோன் பொல்லார்ட், ஹார்திக் பாண்ட்யா, நிக்கோலஸ் பூரன்

பந்து வீச்சாளர்கள்: முகமது ஷமி, ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் சாத்தியமான 11 ஆட்டக்காரர்கள்: மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், நிக்கோலஸ் பூரன், கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், ஜேம்ஸ் நீஷாம் / முஜீப் உர் ரஹ்மான், சர்பராஸ் கான், முருகன் அஸ்வின் / கிருஷ்ணப்பா கௌதம், முகமது ஷாமி, ஷெல்டன் கோட்ரெல், ரவி  பிஷ்னோய்.

மும்பை இந்தியன்ஸ் சாத்தியமான 11 ஆட்டக்காரர்கள்:

ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ஜேம்ஸ் பாட்டின்சன், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா.

அணிகள்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: லோகேஷ் ராகுல், ஹர்பிரீத் பிரர், இஷான் பொரெல், மந்தீப் சிங், ஜேம்ஸ் நீஷம், தாஜிந்தர் சிங், கிறிஸ் ஜோர்டான், கருண் நாயர், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், க்ளென் மேக்ஸ்வெல், முஜீப் உர் ரஹ்மான், சல்பரான்ஸ் கான், மயங்க் அகர்வால், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, நிக்கோலஸ் பூரன், கிறிஸ் கெய்ல், முருகன் அஸ்வின், ஜெகதீஷா சுசித், கிருஷ்ணப்ப கவுதம், ஹார்டஸ் வில்ஜோன், சிம்ரன் சிங்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், திக்விஜய் தேஷ்முக், ஆதித்யா தாரே, சௌரப் திவாரி, ஜஸ்பிரித் பும்ரா, கிருனல் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ராகுல் சாஹர், கிறிஸ் லின், ஹார்திக் பாண்ட்யா, ஷெர்ஃபானே துதர்போர்ட், அன்மோல்ப்ரேத் சிங், மொஹ்சின் கான், மிட்செல் மெக்லெனகன், பிரின்ஸ் பால்வந்த் ராய், அனுகுல் ராய், இஷான் கிஷன், தவல் குல்கர்னி, ட்ரெண்ட் போல்ட், ஜெயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், நாதன் கூல்டர்-நைல், ஜேம்ஸ் பாட்டின்சன்

ALSO READ: ரஷீத் கானின் மனைவி அனுஷ்கா சர்மா என்று Google search காட்டும் மர்மம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News