இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி மித்தாலி ராஜ் இன்று விளையாடும் ஒருநாள் போட்டியின் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இத்தொடரின் இரு போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, இன்று செட்டன்பார்க் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
ODIS FOR MITHALI RAJ
The India legend has added another feather to her cap during the third #NZvIND ODI at Seddon Park.
We take a look back through her landmark innin https://t.co/PPLzYhxwCx pic.twitter.com/2BayMT5wZh
— ICC (@ICC) February 1, 2019
இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம், மித்தாலி ராஜ் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையினை பெற்றுள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான மித்தாலி ராஜ், ஏற்கனவே தனது 192-வது ஒருநாள் போட்டியில் 'அதிக ஒருநாள்' போட்டியில் பங்கேற்ற வீராங்கனை என்னும் பெருமையினை பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள மித்தாலி ராஜ் இதுவரை 52 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். இந்நிலையில் இன்று நடைப்பெறும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 9(28) வெளியேறி இந்திய ரசிகர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.