நாளை முதல் டி-20 போட்டி: பலவீனமான ஆஸ்திரேலியா மீதி ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

நாளை நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் பலவீனமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துமா இந்தியா அணி?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 07:07 PM IST
நாளை முதல் டி-20 போட்டி: பலவீனமான ஆஸ்திரேலியா மீதி ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? title=

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அந்த நாட்டுக்கு எதிராக மூன்று டி-20 போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

நாளை முதல் டி-20 தொடர் நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையே மூன்று டி-20 போட்டி நடக்கிறது. முதல் போட்டி 21-ம் தேதி(நாளை), 2-வது போட்டி 23-ம் தேதி(வெள்ளிகிழமை)யும், 3-வது போட்டி 25-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 

 

டி-20 தொடர் முடிந்தவுடன், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-10 ஆம் தேதியும், டிசம்பர் 14-18 ஆம் தேதியும், டிசம்பர் 26-30 ஆம் தேதியும், ஜனவரி 03-07 ஆம் தேதியும் நடக்க உள்ளது.

 

டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 15-ம் தேதி நடக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 18-ம் தேதி நடக்கிறது.

 

இந்திய அணியை பொருத்த வரை சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை கைப்பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொருத்த வரை தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நன்றாக செயல்படவில்லை. அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி பலவீனமாக உள்ளது. எனவே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதை இந்திய அணி எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதை அடுத்தடுத்து நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு பொறுத்தே தீர்மானிக்க முடியும்.

 

ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 ஆட்டம் பிரிஸ்பேனில் உள்ள காப்பாவில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு போட்டி ஆரம்பம் ஆகும். 

Trending News