நான்காவது டெஸ்ட்; 3_வது நாள்: தொடருமா இந்தியாவின் பந்து வீச்சு மிரட்டல்?

இந்தியா முதல் இன்னிங்ஸில் 273-க்கு ஆல்-அவுட். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2018, 07:51 PM IST
நான்காவது டெஸ்ட்; 3_வது நாள்: தொடருமா இந்தியாவின் பந்து வீச்சு மிரட்டல்? title=

ஐந்தாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. ஜோ ரூட் 48(88) ரன்கள் எடுத்த நிலையில், முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். இந்தியாவை விட 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 


நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களின் கை ஓங்கி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஐந்து பவுலர்கள் பயன் படுத்தப்பட்டனர். அனைவரும் இணைந்து நான்றாக செயல்பட்டதால், 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் தற்போதைய நிலவரப்படி, இந்திய பவுலர்கள் நான்றாக செயல்பட்டு வருகின்றனர். நான்காவது டெஸ்ட் போட்டியில், தற்போது வரை முகம்மது ஷமி மற்றும் ஜாஸ்ரிட் பும்ரா தலா நன்கு விக்கெட்டும், இஷாந்த் சர்மா மூன்று விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டும், ஹார்திக் பாண்டியா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இன்னும் இங்கிலாந்து அணியிடம் ஆறு விக்கெட் உள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விரைவில் ஆறு விக்கெட்டை பறித்தால், இந்த போட்டியும் இந்தியாவின் வசமாகும் என்பதில் சந்தேகமே இல்லை. 

 


இங்கிலாந்து வீரர் ஜானி பியர்ஸ்டோவ் 0(1) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை வேகபந்து வீச்சாளர் முகம்மது ஷமி கைப்பற்றினார். இவர் இரண்டு விக்கெட் எடுத்துள்ளார். இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு நன்கு விக்கெட் இழந்தள்ளது. தற்போது ஜோ ரூட் 30(50) மற்றும் பென் ஸ்டோக்ஸ் 0(0) களத்தில் உள்ளனர்.

 

 


இங்கிலாந்து வீரர் கீடன் ஜென்னிஸ் 36(87) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை வேகபந்து வீச்சாளர் முகம்மது ஷமி கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்தள்ளது. தற்போது ஜோ ரூட் 30(50) எடுத்து களத்தில் உள்ளார்.

இந்தியாவை விட இங்கிலாந்து அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. 31.5 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 92 ரன்கள் எடுத்துள்ளது. இவர்களிடம் இன்னும் 7 விக்கெட் கைவசம் உள்ளது.

 

 


இங்கிலாந்து வீரர் மோயீன் அலி 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை வேகபந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. தற்போது கீடன் ஜென்னிஸ் உடன் இணைந்து ஜோ ரூட் விளையாடி வருகிறார்.

 

 


இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டெய்ர் குக் 12(39) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். தற்போது கீடன் ஜென்னிஸ் மற்றும் மோயீன் அலி ஆடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 24 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

தற்போதிய நிலவரப்பு இங்கிலாந்து அணி 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

 


இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. 21 ரன்கள் பின்தங்கிய நிலையில், தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

 

 


இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று  போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நேற்றைய விட 8 ரன்கள் மட்டுமே அதிகமாக எடுத்த நிலையில், தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 19(24) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஷிகர் தவான் 23 ரன்னுக்கு அவுட் ஆனார். 

புஜாரா மற்றும் இந்திய கேப்டன் விராத் கோலி ஆடினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடினர். விராத் கோலி அரைசதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 46(71) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். புஜாரா மட்டும் நிலைத்து நின்று ஆடி தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 257 பந்துகளை சந்தித்து 132 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

273 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் எம்.எம்.அலி ஐந்து விக்கெட்டுகளை பறித்தார்.

 

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது இங்கிலாந்து அணி. இரண்டாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.  இன்று மூன்றாவது நாள் ஆட்டம் பிற்பகல் தொடங்க உள்ளது.

 

 

Trending News