இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானத்தில் 5-வது ஒருநாள் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து களமிரங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரோகித் 115(126) எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார், இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கிசனி நகிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதனையடுத்து 275 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க களமிரங்கியது.
தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர் எனினும், பின்னர் ஆம்லை 71(92), மர்கரம் 32(32) ரன்களில் வெளியேறினர். இவர்களை அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற தென்னாப்பிரிக்கா அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, 6 ஒருநாள் கொண்ட ஒருநாள் தொடரில், 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது!
5th ODI. It's all over! India won by 73 runs https://t.co/tte6qjPZrA #SAvInd #TeamIndia
— BCCI (@BCCI) February 13, 2018
முன்னதாக, இத்தொடரில் நடைப்பெற்ற போட்டிகளில், மூன்று போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.