ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 41 பந்துகளில், 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் முகமது சமி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 186 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது. சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டது. சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் நிதானமாக விளையாட கருண் நாயர் அதிரடி ஆட்டம் மேற்கொண்டார். 11 ஓவர்களில் டெல்லி அணி 101 ரன்கள் குவித்தது.
கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. முகமது சிராஜ் வீசிய 17-வது ஓவரில் கோரே ஆண்டர்சன் தலா ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.
புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரிலும் கோரே ஆண்டர்சன் தலா ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் விளாசினார். இதனால் டெல்லி அணியின் வெற்றி எளிதானது. சித்தார்த் கவுல் வீசிய 19-வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது.ஹென்ரிக்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை கோரே ஆண்டர்சன் பவுண்டரிக்கு விரட்ட டெல்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Match 40. It's all over! Delhi Daredevils won by 6 wickets https://t.co/62RCV0sXMg #DDvSRH
— IndianPremierLeague (@IPL) May 2, 2017