7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
முதலில் பேடிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பு 161 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 71 ரன்களும், 59 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Match 32. It's all over! Kolkata Knight Riders won by 7 wickets https://t.co/FI6l5XNCtT #KKRvDD
— IndianPremierLeague (@IPL) April 28, 2017
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சியது. நெருங்கி வந்து கடைசி கட்டத்தில் சறுக்கி விடும் டெல்லி அணி, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், தோல்விப்பாதையில் இருந்து மீளலாம்.
இந்நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் நான்கு மணிக்கு மோதுகின்றனர்.