ஆண் நண்பரிடம் இந்த 5 அறிகுறிகளை பார்த்தால்... பெண்களே உஷார் ஆகுங்க - அவர் உங்களை காதலிக்கலாம்!

Relationship Tips: நட்புறவில் இருக்கும் ஆண் நண்பர் இந்த 5 அறிகுறிகளையும் வெளிப்படுத்தினால் அவர் அந்த பெண் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் என அர்த்தமாம். அதுகுறித்து முழுமையாக இங்கு பார்க்கலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 13, 2024, 09:54 PM IST
  • ஆண் - பெண் இருவரும் நட்பாக இருப்பது இயல்பே.
  • அதுவும் நட்பில் இருப்பவர்கள் பின்னர் காதலிப்பதில் தவறில்லை.
  • நட்பு என்பது ஒரு புள்ளியில் கூட காதலாக மாறலாம்.
ஆண் நண்பரிடம் இந்த 5 அறிகுறிகளை பார்த்தால்... பெண்களே உஷார் ஆகுங்க - அவர் உங்களை காதலிக்கலாம்!

Relationship Tips In Tamil: இன்றைய நேரப்படி ஒரு ஆணும், பெண்ணும் ஆழமான நட்பில் இருப்பதற்கான சந்தர்ப்பம் என்பது அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லூரி, வேலையிடம் தாண்டி இணையம் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக நட்பாக இருக்க பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அனைத்திற்கும் சில எல்லைகள் இருக்கிறது. அதாவது ஆண் - பெண் நட்புக்கு என்றும் எல்லை இருக்கிறது. அந்த எல்லையை இருவரும் தாண்டாத வரை நட்பு சிறப்பானதாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

சில சமயங்களில் இந்த எல்லை தாண்டுவதும் வழக்கம்தான். அதாவது, நட்பு என்பதை தாண்டி காதல் உறவுக்கு செல்ல ஆண் - பெண் இருவரின் ஒருவர் முடிவெடுக்கலாம். இதில் தவறு ஏதும் கிடையாது. இருப்பினும், மற்றவருக்கு அதில் விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்துகொள்வதும் நல்லதாகும். ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருக்கும்பட்சத்தில் அதில் பெரும்பாலும் ஆண் நண்பர்தான் காதல் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்வார் எனலாம். 

அந்த வகையில், பெண்கள் உங்களிடம் நட்புறவில் ஆண் நண்பர் இந்த அறிகுறிகளை காண்பிக்கும்பட்சத்தில் உங்களின் உறவை வேறொரு பரிமாணத்திற்கு நீட்டித்துக்கொள்ள விரும்புகிறார் என அர்த்தம். ஒருவேளை பெண்கள் நீங்களும் அவர் உங்களை காதலிக்கிறார் இல்லையா என்பதை அறிந்துகொள்ள இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டியதும் அவசியமாகும். நட்புறவில் இதுகுறித்து எப்படி உங்களிடம் சொல்வது என்ற தயக்கம் பெரும்பாலும் இருக்கும். எனவே, இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்துவிட்டால் மற்ற விஷயங்கள் இயல்பாகிவிடும் எனலாம்.

மேலும் படிக்க | உங்களை ரொம்ப கடுப்பேற்றுபவரிடம் இருந்து கழன்று கொள்ள 7 ஈசி டிப்ஸ்!

அதிக நேரம் செலவிடுதல்

உங்களுடன் இருப்பதையும், உங்களுக்கு நேரம் செலவழிப்பதையும் அவர் விரும்புகிறார் என்றால், அதாவது அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் அவர் உங்கள் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் என அர்த்தம். அவனுடைய வேலைகளை விட்டு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றாலே நீங்கள் உஷாராக வேண்டியது நேரம் அது. 

அதீத பாதுகாப்பு

உங்களை அதிகம் கவனித்துக்கொள்வதையும், அதிகம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதிலும் அக்கறையாக இருந்தால் அவர் உங்களை விரும்புகிறார் என அர்த்தம். மற்றவர்கள் உங்களை திட்டிவிடக்கூடாது, அதட்டிவிடக்கூடாது என்பதற்காக அவர் பல முயற்சிகளை எடுக்கிறார் என்றால் அவர் மனதில் நீங்கள் நிறைந்திருக்கலாம். அவரின் வாழ்வில் உங்களுக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளார் எனவும் பொருள் கொள்ளலாம். 

உணர்வுகளை வெளிப்படுத்துதல்

உணர்வுகளை வெளிப்படுத்துவது இயல்பு தானே என நினைக்கலாம். ஆனால், அதுவரை மறைத்து வந்த விஷயங்களை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படுத்துகிறார் என்றால் அவரின் நோக்கம் நட்பை தாண்டியது எனலாம். 

பொறாமை உணர்வு

மற்ற ஆண்களுடன் இயல்பாக பேசினால் அவர் பொறாமை அடைகிறார் என்றால் அது உங்கள் மீது காதல் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும். மற்றவர்களுடன் பேசாதே என சொல்வதும், மற்றவர்களுடன் பேசுவதால் சோகமாக இருப்பதும் அவர் உங்கள் மீது காதல் உணர்வில் இருக்கிறார் என அர்த்தம். 

எதிர்கால திட்டங்களில் சேர்ப்பது

அடுத்த 10 ஆண்டுகளில் தான் செய்ய இருக்கும் விஷயங்களில் உங்களையும் சேர்த்துக்கொள்கிறார் என்றால் அவர் உங்களை வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கிறார் என அர்த்தம். எதிர்கால விஷயங்களை திட்டமிடுவது, எதிர்காலம் குறித்து அதிகம் பேசுவது ஆகியவையும் இதில் அடங்கும். 

மேலும் படிக்க | பெண்கள் 30 வயதுக்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பா கத்துக்கணும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News