சொல்லி வைத்தது போல் நடந்த Qualifier மற்றும் Eliminator போட்டிகள்!

ஐபிஎல் 2021 போட்டிகள் முடிவடைந்து நாளை பைனல் போட்டி நடக்க உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Oct 14, 2021, 08:13 PM IST
சொல்லி வைத்தது போல் நடந்த Qualifier மற்றும் Eliminator போட்டிகள்! title=

ஐபிஎல் 2021 எலிமினேட்டர் போட்டிகள் முடிவடைந்து நாளை நடக்க உள்ள பைனல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.  புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களில் சென்னை, டெல்லி, பெங்களூர் அணிகள் இடம்பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.  கடைசி இடத்திற்கு 4 அணிகள் போராடியது.  இறுதியில் கொல்கத்தா அணி 4வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. 

முதல் குவாலிபைர் போட்டி கடந்த 10ம் தேதி டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.  இதில் பெற்றி பெற்றால் நேரடியாக பைனலுக்கு சென்று விடலாம் என்பதால் இரண்டு அணிகளும் கடுமையாக போராடியது.  கடைசி இரண்டு ஓவரில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

ALSO READ நேற்றைய போட்டியில் அம்பயரை வம்பிழுத்த பந்த்: வைரல் வீடியோ

எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.  இதில் வெற்றி பெரும் அணிகள் குவாலிபைர் போட்டியில் தோல்வியுற்ற டெல்லி அணியுடன் மோத வேண்டும்.  ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்ல போராடியது.  எனினும் இந்த வருடமும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.  கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

குவாலிபைர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டியின் முடிவுகள் ஒரே போல் அமைந்தன.  இரண்டு போட்டிகளிலுமே இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றன.  அதிலும் குறிப்பாக 19.4 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றுள்ளது.  நேற்று நடைபெற்ற குவாலிபைர் 2 போட்டியில் டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு சென்றது கொல்கத்தா.  நாளை நடக்க உள்ள பைனல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

ALSO READ 2012-ல் என்ன நடந்தது? 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலில் மோதும் CSK vs KKR

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News