பீஸ்ட் மோடில் ஹைதராபாத்! ஹாட்ரிக் வெற்றி!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2022, 11:23 PM IST
  • சன்ரைசர்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி.
  • நடராஜன் சிறப்பான பவுலிங்.
  • திரிபாதி அபார அரை சதம்.
பீஸ்ட் மோடில் ஹைதராபாத்! ஹாட்ரிக் வெற்றி! title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.  கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியிலும் அதனைத் தொடர களமிறங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பௌலிங் தேர்வு செய்தார்.

 

மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?

ஆரம்பம் முதலே அதிரடி காட்டக்கூடிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள், இந்த போட்டியில் சன்ரைஸ் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சிதறினர். பின்ச் 7 ரன்களுக்கு வெளியேறினார், தனது அற்புதமான பந்துவீச்சால் வெங்கடேச ஐயர் மற்றும் நரேனின் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். சிறிது நேரம் தாக்குப் பிடித்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுக்கு வெளியேறினார். பின்பு ஜோடி சேர்ந்த நித்திஷ் ராணா மற்றும் ரஸல் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. ராணா 54 ரன்களும், ரஸல் 49 ரன்களும் அடிக்க கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது.  சன்ரைசர்ஸ் அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

சிறிது கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கும் ஓப்பனிங் சுமாராகவே அமைந்தது. அபிஷேக் சர்மா மூன்று ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 17 ரன்களுக்கும் வெளியேறினர். பின்பு ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி மற்றும் மார்க்ரம் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். 37 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 71 ரன்களை குவித்தார் ராகுல் திரிபாதி. மறுபுறம் மார்க்ரம் 36 பந்துகளில் 68 ரன்கள் அடிக்க 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 176 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ். இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு ஐபில் 2022-ல் ஹாட்ரிக் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

 

மேலும் படிக்க | சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News