LSG vs CSK Dream11 Team: ஹாட்ரிக் வெற்றியா? அல்லது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி-ஆ?

LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 19, 2024, 11:57 AM IST
LSG vs CSK Dream11 Team: ஹாட்ரிக் வெற்றியா? அல்லது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி-ஆ? title=

Chennai Super Kings vs Lucknow Super Giants Predicted: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடரின் இன்றைய 34வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துவார்.

கணிப்பு: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடும் 11 பேர் யார்?

முதலில் பேடிங் தேர்வு செய்தால் யார் களம் இறங்க வாய்ப்பு?

குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர்.

முதலில் பவுலிங் தேர்வு செய்தால் யார் களம் இறங்க வாய்ப்பு?

குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர், மயங்க் யாதவ்/ அர்ஷத் கான்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் பிளேயர் யார்? 

அர்ஷத் கான், மயங்க் யாதவ், எம் சித்தார்த், அமித் மிஸ்ரா, கே கௌதம்

மேலும் படிக்க - சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!

கணிப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் 11 பேர் யார்?

முதலில் பேடிங் தேர்வு செய்தால் இவர்கள் களம் இறங்க வாய்ப்பு அதிகம்

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்.

முதலில் பவுலிங் தேர்வு செய்தால் இவர்கள் களம் இறங்க வாய்ப்பு அதிகம்

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.

சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் பிளேயர் யார்?

மதீஷா பத்திரனா, நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர், மொயின் அலி, ஷேக் ரஷீத்.

மேலும் படிக்க - தோனி தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரகசியம் இதுதான்- ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்

ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடந்த ஆறு ஆட்டங்களில் விளையாடி மூன்று போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டி மூலம் தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்க வியூகத்துடம் களம் இறங்கவுள்ளது.

ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல்: சென்னை சூப்பர் கிங்ஸ்

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி நான்கு போட்டியில் வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காத்திருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா, நிஷாந்த் ஏ சிந்து, எம் சிந்து, எம். , ஷேக் ரஷீத், ஆரவெல்லி அவனிஷ், மகேஷ் தீக்ஷனா, ஆர்எஸ் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் ஜாதவ் மண்டல், ரிச்சர்ட் க்ளீசன், தீபக் சாஹர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் விவரம்

குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், பிரேராக் மங்கட், அர்ஷத் கான், கிருஷ்ணப்பா கவுதம் , அமித் மிஸ்ரா, கைல் மேயர்ஸ், ஆஷ்டன் டர்னர், மாட் ஹென்றி, நவீன்-உல்-ஹக், தேவ்தத் படிக்கல், யுத்வீர் சிங் சரக், மயங்க் யாதவ், அர்ஷின் குல்கர்னி.

மேலும் படிக்க - டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News