ஐ.பி.எல். போட்டி தொடர் இந்தியாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்தியாவில்தான் நடக்க வேண்டும்- ஷாருக்கான்

Last Updated : May 11, 2016, 11:41 AM IST
ஐ.பி.எல். போட்டி தொடர் இந்தியாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்தியாவில்தான் நடக்க வேண்டும்- ஷாருக்கான் title=

நடந்து வரும் 2016 ஐபிஎல் 9வது சீசனில் சில போட்டிகள் மாநிலத்தில் நிலவும் வறட்சி காரணமாக வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டு நடந்துவருகிறது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் 1௦வது சீசன் வெளிநாடுகளில் நடக்கலாம் என தகவல்கள் பரவின. எனவே இதை குறித்து கொல்கத்தா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கானிடம் கேட்டபோது அவர் கூறியது

என்னை பொறுத்துவரை இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இந்தியாவில் நடந்தால் தான் நன்றாக இருக்கும். ஏனெனில் இங்கு தான் கிரிக்கெட் பார்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் அதனால் நல்ல வர்த்தகம் ஏற்படும். இந்தியாவில் நிலவும் வறட்சி காரணமாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் சில மாற்றப்பட்டு நமது மண்ணில் தான் நடக்கிறது. அதுபோல ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தாமல் இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கூறினார்.

Trending News