DCvsGT Highlights: திவாட்டியா விளாசிய 3 சிக்ஸ் வீண்.. இஷாந்த் அபார பந்துவீச்சில் டெல்லி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. திவாட்டியா 3 சிக்ஸ் தொடர்ச்சியாக அடித்தபோதும், இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சில் திரில் வெற்றியை பெற்றது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 2, 2023, 11:44 PM IST
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி
  • குஜராத்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது
  • கடைசி ஓவரை சூப்பராக வீசிய இஷாந்த் ஷர்மா
DCvsGT Highlights: திவாட்டியா விளாசிய 3 சிக்ஸ் வீண்.. இஷாந்த் அபார பந்துவீச்சில் டெல்லி வெற்றி  title=

வெற்றி பயணத்தில் டெல்லி 

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியனும், இப்போது ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தில் இருக்கும் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மேலும் படிக்க | IPL 2023 | GT vs DC: ஐபிஎல் கோப்பை கனவை தக்க வைக்குமா? சிக்கலில் டெல்லி அணி!

சொதப்பலான தொடக்கம்

டெல்லி அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட்டும், கேப்டன் டேவிட் வார்னரும் தொடங்கினர். ரன் கணக்கை தொடங்கும் முன்னரே டெல்லி அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. முகமது ஷமி வீசிய பந்தில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் (0 ரன்), டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் கேப்டன் டேவிட் வார்னர் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட்டில் தன் விக்கெட்டை இழந்தார். குஜராத் வீரர் ரஷித் கான் துல்லியமாக வீசி வார்னரின் விக்கெட்டை கபளீகரம் செய்தார்.

மீண்டும் அக்சர் படேல்  

அடுத்தடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.பிரியம் கார்க் 10 ரன், ரில்லே ரோஸ்சவ் 8 ரன், மணீஷ் பாண்டே 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். அக்சர் பட்டேல் மட்டும் அமன் ஹக்கின் கான் ஆகியோர் அணியின் நிலையை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரரியாக ஆடிய அமன் ஹக்கிம் கான் அரை சதம் அடித்தார். 51 ரன் விளாசிய அமன் ஹக்கிம் கான் அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். மறுபுறம் அக்சர் 27 ரன், ரிபல் பட்டேல் 21 ரன் என அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 130 ரன்கள் குவித்தது.

டெல்லி சிறப்பான பந்துவீச்சு 

131 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் முதலே ஆட்டம் சரியாக அமையவில்லை. சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அந்த அணி வீரர்கள் சொதப்பினர். சீரான இடைவெளியில் குஜரத் அணியின் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. ஒருபுறம் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். 

ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. திவாட்டியா 19வது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசியபோதும், கடைசி ஓவரில் இஷாந்த் ஷர்மா அற்புதமாக பந்துவீசி டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். 12 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. குஜராத் அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க | என்ன சீண்டுனா டபுளா கிடைக்கும் காம்பீர்: விராட் கோலியின் பஞ்ச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News