சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது எலிமினேட்டர் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். முதலாவது குவாலிபையரில் சென்னை அணி குஜராத் அணிக்கு எதிராக பேட்டிங் எடுத்து வெற்றி பெற்றதால், அதே ஃபார்முலாவை பாலோ செய்தார் மும்பை கேப்டன் ரோகித். இது அவருக்கு பலனும் கொடுத்தது. சிறப்பாக பந்துவீசிய மத்வால் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரின் சிறப்பான பந்துவீச்சை மும்பை அணியின் வெற்றிக்கு அடித்தளம் இட்டது.
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்
டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஓரிரு ஷாட்டுகளை அடித்தாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கேம்ரூன் கிரீன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் மும்பை ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இவர்கள் ஆடும்போது மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க | IPL 2023: 10ஆவது முறையாக இறுதிப்போட்டியில் சிஎஸ்கே... தல தோனியின் அசத்தல் கேப்டன்ஸி!
லக்னோ சிறப்பான பந்துவீச்சு
மிடில் ஓவர்களில் லக்னோ அணி கட்டுக்கோப்பாக பந்துவீச மும்பை அணி ரன் எடுக்க தடுமாறியதுடன் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் இறுதிக் கட்டத்தில் திலக் வர்மா மற்றும் நேகல் வகேரா ஆகியோர் கனிசமான பங்களிப்பைக் கொடுக்க 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இதனை சேஸ் செய்தால் இரண்டாவது எலிமினேட்டருக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் லக்னோ அணி களமிறங்கியது.
மும்பை அணி பீல்டிங் அபாரம்
தொடக்க வீரர்களாக மேயர்ஸ் மற்றும் மன்கன்ட் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் ஸ்டொயினஸ் மட்டும் கனிசமாக அதிரடியாக விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதும் போவதுமாக இருந்தனர். குறிப்பாக ஆகாஷ் மத்வால் துல்லியமாக பந்துவீசி லக்னோ அணியை சீர்குலைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் 5 முக்கியமாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் லக்னோ அணி 101 ரன்களுக்கு ஆட்டமிழக்க 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறியது மும்பை அணி. வெள்ளிக்கிழமை அகமதாபத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
மேலும் படிக்க | IPL Eliminator 2023: தோனி ஃபார்முலாவை ஃபாலோ செய்த ரோகித் சர்மா..! கை கொடுக்குமா?
மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ