முதல் எலிமினேட்டர்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணியும் களமிறங்கியுள்ளது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக பேட்டிங் தேர்வு செய்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, மைதானம் மிகவும் பெரியதாக இருப்பதால் முதலில் பேட்டிங் விளையாடி அதிக ரன்கள் எடுத்தால் சேஸிங் செய்யும் அணிக்கு அது சவாலாக இருக்கும், அதனை மனதில் வைத்தே பேட்டிங் தேர்வு செய்திருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் படிக்க | RCB Vs GT: நீயா நானா? ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்த குஜராத் அணி! போட்டியின் ஹைலைட்ஸ்
ரோகித் சர்மா முடிவு
அவர் பேசும்போது, டாஸ் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம். இங்கு மைதானம் பெரியது. மும்பை என்றால் சேஸிங் எடுக்கலாம். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் விளையாடுவது சிறந்தது என நினைக்கிறேன். அதனால் நாங்கள் முதலில் பேட்டிங் விளையாடி எங்களால் முடிந்தளவுக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயிக்க முயற்சிக்கிறோம். அணியில் ஒரே ஒரு மாற்றமாக கார்த்திகேயாவுக்கு பதிலாக சோகீன் சேர்க்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.
தோனி ஃபார்முலா
Huge roar for Rohit in Chepauk. pic.twitter.com/Gp4RvWAGNe
— Johns. (@CricCrazyJohns) May 24, 2023
ரோகித்தின் இந்த முடிவுக்கு பின்னால் தோனியின் பார்முலா இருக்கிறது. இதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதலாவது குவாலிஃபையரில் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக பைனலுக்கு தகுதி பெறலாம் என்பதால், டாஸ் வெற்றி பெற்ற தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சவாலான ஸ்கோரை நிர்ணயித்து குஜராத் அணிக்கு பவுலிங்கில் டப் கொடுத்து வெற்றியும் பெற்றது. இதே டெக்னிக்கை தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஃபாலோ செய்திருக்கிறார் ரோகித் சர்மா. தோனியின் பார்முலா ரோகித் சர்மாவுக்கு கை கொடுக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ