ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய போட்டியில், இந்திய அணி அதிர்ச்சிகரமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியிருந்தாலும், அதற்கு முன் வங்கதேச அணிக்கு இப்படியொரு தோல்வியை தோல்வி தேவை தானா? என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்திய அணியின் மோசமான ஆட்டம்
வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய, வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை அந்த அணி இழந்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப்-உல்-ஹசன் 80 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது.
மேலும் படிக்க | ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு இந்த படை தான் தேவை... உத்தேச அணி ஒரு பார்வை!
அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சி
இந்திய அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. சுப்மான் கில் மட்டும் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில், அவருக்கு பக்கபலமாக யாரும் களத்தில் நிற்கவில்லை. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
இஷான் கிஷன் பொறுப்பில்லாத ஆட்டம்
இந்த போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான திலக் வர்மா ஆட்டத்தின் மீது அனைவரது பார்வையும் இருந்தது. ஆனால் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இஷான் கிஷன் மீதுதான் அனைவரது நம்பிக்கையும் இருந்தது. அவர் களத்தில் இருந்தால் அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கு அவர் ஏமாற்றத்தைக் கொடுத்தார். 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அவருடைய விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் இஷன் கிஷன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | IND vs BAN: படுதோல்வி அடைந்த இந்தியா... புலியாக பாய்ந்தது பங்களாதேஷ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ