’கம்பேக்னா இப்படி இருக்கணும்’ இந்திய அணிக்கு கேப்டனாக வந்த ஜஸ்பிரித் பும்ரா

காயத்தால் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2023, 11:02 PM IST
  • இந்திய அணியின் கேப்டன் பும்ரா
  • அயர்லாந்து தொடருக்கு நியமனம்
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில்
’கம்பேக்னா இப்படி இருக்கணும்’ இந்திய அணிக்கு கேப்டனாக வந்த ஜஸ்பிரித் பும்ரா title=

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்திய அணியில் கிட்டதட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக விளையாடவில்லை. தொடர் சிகிச்சை மூலம் குணமடைந்த அவர், மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வந்தார். இப்போது அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ கேப்டனாக நியமித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!

அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜிதேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். சிஎஸ்கே அணிக்கு விளையாடிய சிவம் துபேவுக்கும் அயர்லாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பதால் துபேவுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி 18ம் தேதியும்,  இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும். தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பையை கருத்தில் கொண்டு, அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி : ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற புவனேஷ்வர் குமார் முடிவு? இன்ஸ்டா போஸ்ட் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News