நாங்கள் கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என நிரூபித்த ஆர்சிபி

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

Written by - RK Spark | Last Updated : Apr 20, 2022, 12:02 AM IST
  • ஃபாஃப் டு பிளெசிஸ் சிறப்பாக ஆடி 96 ரன்கள் அடித்தார்.
  • க்ருனால் பாண்டியா அதிரடியாக 42 ரன்கள் குவித்தார்.
  • ஆர்சிபி சிறப்பாக வெற்றி பெற்றது.
நாங்கள் கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என நிரூபித்த ஆர்சிபி title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியும் மோதின.  இந்த போட்டி மும்பை DY பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

 

மேலும் படிக்க | ஷிவம் துபே செய்த காரியம்! கடுப்பாகி தொப்பியை வீசிய ஜடேஜா!

ஆர்சிபி அணிக்கு ஆரம்பித்திலேயே 2 அதிர்ச்சி காத்திருந்தது. அனுஜ் ராவத் 4 ரன்களும், விராட் கோலி 0 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.  பின்பு ஜோடி சேர்ந்த டு பிளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  மேக்ஸ்வெல் 23 ரன்களுக்கும் வெளியேற,  ஷாபாஸ் அகமது 26 ரன்களும், தினேஷ் கார்த்திக் 13 ரன்களும் அடித்து இருந்தனர்.  சிறப்பாக விளையாடிய கேப்டன் டு பிளெசிஸ் 64 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.  20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.

 

கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ஆரம்பத்திலேயே இரண்டு அதிர்ச்சி காத்திருந்தது. குயின்டன் டி காக் 3 ரன்களிலும், மனிஷ் பாண்டே 6 ரன்களிலும் வெளியேறினர். பின்பு கேஎல் ராகுல் மற்றும் க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். கே எல் ராகுல் 30, பாண்டியா 42 ரன்களுக்கும் வெளியேற போட்டி ஆர்சிபி பக்கம் மாறியது. அதன் பிறகு இறங்கிய லக்னோ வீரர்கள் ரன்கள் அடிக்க தவறினர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் மட்டுமே அடித்தது, இந்த போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

 

மேலும் படிக்க | 2022 உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைக்குமா?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News