கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சன்ரை சர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.
டாஸில் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்யஅழைத்தார். கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்று தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்ய வந்த யூசுப்பதான் சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 52 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசியாக கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது.
ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனதால் ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் சுற்றுப் தகுதி பெற்றது. ஏற்கனவே ஐதராபாத் அணியின் பிளே ஆப் சுற்றுப் தகுதி பெற்றதுள்ளது என்பது குறிபிடத்தக்கது.