கொல்கத்தா vs ஐதராபாத் அணி: 2வது தகுதி சுற்றுக்கு நுழையும் அணி எது?

Last Updated : May 25, 2016, 07:37 PM IST
கொல்கத்தா vs ஐதராபாத் அணி: 2வது தகுதி சுற்றுக்கு நுழையும் அணி எது? title=

இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.இப்போட்டியில் தோற்கும் அணி வெளியேறும். அதனால் இவ்விரு அணிகளும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தா அணி ஏற்கனேவே ஐ.பி.எல் தொடர் 2012 மற்றும் 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2011-ல் பிளே ஆப் சுற்று வரை முன்னேறியிருக்கிறது.

ஐதராபாத் அணி ஐ.பி.எல் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆனால் கடந்த 2013-ல் நடந்த ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறி சென்றது. ஐதராபாத் அணி ஐ.பி.எல் தொடரில் கடைசியாக ஆடிய இரு ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் சந்திக்கும் வரும் 27-ம் தேதி அப்போட்டி டெல்லியில் நடைபெறும்

Trending News