Hat-Ttrick விக்கெட் எடுத்த சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனையை செய்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 18, 2019, 08:53 PM IST
Hat-Ttrick விக்கெட் எடுத்த சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் title=

புது டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனையை செய்துள்ளார். இன்றை போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. 388 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்ற நிலையில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது. 

33 வது ஓவரை வீசிய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நான்காவது பந்தில் ஷாய் ஹோப், ஐந்தாவது பந்தில் ஜேசன் ஹோல்டர், ஆறாவது பந்தில் அல்சாரி ஜோசப்பை அவுட் செய்தார். 

 

ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இந்திய வீரர்கள்: 
நாக்பூர் 1987: சேதன் சர்மா vs நியூஜிலாந்து
கொல்கத்தா 1991: கபில் தேவ் vs இலங்கை 
கொல்கத்தா 2017: குல்தீப் யாதவ் vs ஆஸ்திரேலியா
சவுத்தாம்ப்டன் 2019: மொஹமடத் ஷமி vs ஆப்கானிஸ்தான்
விசாகப்பட்டினம் 2019: குல்தீப் யாதவ் vs வெஸ்ட் இண்டீஸ்.

இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்த இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் தான் முதல் முறையாக இந்த சாதனையை செய்துள்ளார். அதேபோல ஒருமுறைக்கு அதிகமான ஹாட்ரிக் சாதனை படைத்த சர்வதேச வீரர்களில் ஆறாவது வீரராக இடம் பிடித்துள்ளார். அதிக ஹாட்ரிக் சாதனை பட்டியலில் இலங்கை வீரர் மலிங்காவின் முதலிடத்தில் உள்ளது. அவர் மூன்று முறை இந்த சாதனையை செய்துள்ளார்.

ஒருமுறைக்கு அதிகமாக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்தவர்கள்: 
எல் மலிங்கா - 3 
வாசிம் அக்ரம் - 2 
சக்லைன் முஷ்டாக் - 2 
சாமிந்த வாஸ் - 2 
ட்ரெண்ட் போல்ட் - 2 
குல்தீப் யாதவ் - 2 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News