Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் பல்வேறு வழிகள் மூலம் தற்போதும் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். முன்பு கிரிக்கெட் மூலம் சம்பாதித்து வந்த சச்சின், தற்போது பிராண்ட் அம்பாசிடர், முதலீடுகள் மூலம் வருமானம் பெற்று வருகிறார். கடந்த ஆண்டின் நிலவரப்படி, சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு 170 மில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. சச்சினுக்கு எந்த வழிகளில் எல்லாம் வருமானம் வருகிறது என்று பார்ப்போம்.
GOD OF CRICKET
- 2011 WC Winner.
- Most runs in Int'l Cricket.
- The Bharat Ratna Award.
- 18,426 ODI Runs.
- 15,921 Test Runs.
- 34,357 Int'l runs.
- 100 Int'l Hundreds.
- 201 int'l Wickets.The Inspiration for billions - HAPPY BIRTHDAY, SACHIN TENDULKAR. pic.twitter.com/x09VmXKhvf
— Rohit Singh (@Mr_Chartist) April 24, 2024
மேலும் படிக்க | இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?
பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் முதலீடு
தற்போது சச்சின் டெண்டுல்கரின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது பிராண்ட் ஒப்பந்தங்களில் இருந்து வருகிறது. அப்பல்லோ டயர்ஸ், ஐடிசியின் சாவ்லான், ஜியோசினிமா, ஸ்பின்னி, ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் போன்ற பல நிறுவனங்களுக்கு பிராண்ட் தூதராக உள்ளார் சச்சின். இந்த ஒப்பந்தங்கள் மூலம் அவருக்கு கிட்டத்தட்ட $40 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. இதுதவிர, பல்வேறு நிறுவனங்களில் சச்சின் முதலீடு செய்துள்ளார். முதலீடுகளின் மொத்த மதிப்பு சுமார் $70 மில்லியன் என கூறப்படுகிறது.
சொகுசு கார்கள் மற்றும் வீடு
சச்சின் டெண்டுல்கருக்கு கார்கள் மீது ஆர்வம் அதிகளவில் உள்ளது. ஃபெராரி, நிசான், BMW, Mercedes-Benz போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார். மேலும் பல்வேறு கார் உற்பத்தியாளர்களுக்கான பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். சொகுசு கார்களில் மட்டுமே 20 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். கார்கள் தவிர ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்துள்ளார் சச்சின். மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சச்சின் வீடு உள்ளது. இந்த வீடு 2009ல் கட்டப்பட்டது. தற்போது இதன் மதிப்பு ரூ. 60 கோடி என்று கூறப்படுகிறது.
நிகர சொத்து மதிப்பு
சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் பல கோடிகள் அதிகரித்து வருகிறது. 2018ல் $15 மில்லியனாக இருந்தது, 2019ல் $25 மில்லியனாக அதிகரித்தது. 2020ல் $45 மில்லியன், 2021ல் $75 மில்லியன், 2022ல் $120 மில்லியன் மற்றும் 2023ல் $170 மில்லியனை எட்டியது. இதன் இந்திய மதிப்பு ரூ. 1390 கோடிகள் ஆகும். இது அவரது நிகர மதிப்பின் வளர்ச்சியை காட்டுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வருமானம் கொட்டி வருகிறது.
மேலும் படிக்க | சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ