T20 World Cup: இந்தியா டார்கெட் செய்ய வேண்டிய பாக்.,வீரர்; கொஞ்சம் விட்டாலும் ஆட்டம் காலி

நல்ல ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் வீரரை இந்திய அணி டார்கெட் செய்யாமல் விட்டால், வெற்றி பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 07:34 AM IST
  • இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி
  • இந்தியா டார்கெட் செய்ய வேண்டிய வீரர்
  • ரோகித் சர்மா போட வேண்டிய மாஸ்டர் பிளான்
T20 World Cup: இந்தியா டார்கெட் செய்ய வேண்டிய பாக்.,வீரர்; கொஞ்சம் விட்டாலும் ஆட்டம் காலி  title=

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய அணிக்கு எப்போதும் ஆபத்தாக இருக்கும் ஒரு வீரரை நிச்சயம் டார்கெட் செய்தே ஆக வேண்டும். 

இந்தியாவுக்கு ஆபத்தான வீரர்

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சிறப்பான பார்மில் இருக்கிறார். எப்போதும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் அவர், ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியை தனி ஒருவராக இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். மேலும், 2022 ஆசிய கோப்பையில் அதிக ரன் குவித்தவரும் இவர் தான். அதிரடி ஆட்டத்தை தொடங்கிவிட்டால், இவரை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். கூடுமானவரை மிக விரைவாக இவருடைய விக்கெட்டை எடுக்க வேண்டும். 

மேலும் படிக்க | T20 Worldcup: ரோகித்தின் மாஸ்டர் பிளான்; திடீரென ஆஸ்திரேலிய பறந்த 2 இளம் பந்துவீச்சாளர்கள்

இந்தியாவுக்கு எதிராக ரன் மழை

ஏற்கனவே கூறியதுபோல், இந்திய அணிக்கு எதிராக என்றால் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடியவர் முகமது ரிஸ்வான். கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார். ஆசிய கோப்பை போட்டியிலும் சூப்பர் 4 சுற்றில் 71 ரன்கள் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக 69 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அவர்,2337 ரன்கள் குவித்துள்ளார்.

கேப்டன் ரோகித்துக்கு இருக்கும் சவால்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ரிஸ்வானுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வித்தியாசமான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். இன்னிங்ஸின் தொடக்கத்தில் ரிஸ்வான் எப்போதும் மெதுவாக பேட் செய்வார். அந்த நேரத்தில் சரியான பந்துவீச்சாளரை பயன்படுத்தி அவருடைய விக்கெட்டை எடுக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்தியாவின் வெற்றி கிட்டதட்ட எளிதாக இருக்கும்.

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதும் போர்'களம்' ரெடி; ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News