இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் இன்னும் மிகவும் பிரபலமாகவே உள்ளார். அவரை இன்னும் உலகின் மிகச்சிறந்த கேப்டனாக அனைவரும் கருதுகின்றனர்.
40 வயதிலும், கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நான்காவது முறையாக ஐ.பி.எல்-ல் சாம்பியனாக்கினார் தோனி. இந்த முறையும், ஐபிஎல் 2022 சீசனுக்காக மகேந்திர சிங் தோனியை (MS Dhoni) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளது. பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான், மகேந்திர சிங் தோனியை வாங்க முடியும் என்றால் அதற்காக தனது பைஜாமா வரை அனைத்தையும் விற்க தயாராக இருந்த காலமும் ஒன்று இருந்தது.
‘என் பைஜாமா வரை அனைத்தையும் விற்று கூட தோனியை வாங்க முயற்சி செய்வேன்’
ஐபிஎல் 2017 ஏலத்தின் போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர் ஷாருக்கான், மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பற்றி மிகப்பெரிய கூற்று ஒன்றை அளித்தார். தனது அணிக்கு, தோனி போன்ற ஒரு கேப்டனை வாங்க, தன்னுடைய அனைத்து ஆடைகளையும் கூட விற்க தான் தயாராக இருப்பதாக அவர் அப்போது கூறியிருந்தார்.
ALSO READ | INDvsSA: மழையினால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
தோனி மீதான ரசிகர்களின் மோகம் இன்னும் குறையவில்லை
ஷாருக் கான் (Shahrukh Khan), "அவரது பெயர் ஏலத்தில் வந்தால் போதும், நான் என் பைஜாமா வரை அனைத்தையும் விற்று அவரை வாங்க முயற்சி செய்வேன்” என்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனி மீதான ரசிகர்களின் மோகம் குறையவில்லை. இப்போதும் மக்கள் அவரை களத்தில் பார்க்க விரும்புகிறார்கள்.
பாலிவுட் நட்சத்திரங்களும் ரசிகர்களாக இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தோனி. மகேந்திர சிங் தோனி சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அவர் துணிச்சலான ராணுவ அதிகாரியும்தான். அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
KKR அணி இரண்டு முறை IPL வென்றுள்ளது
KKR அணி இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சிஎஸ்கே-வை (CSK) வீழ்த்தி கேகேஆர் பட்டம் வென்றது. இதற்குப் பிறகு, கே.கே.ஆர் அணி, 2014 இல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப்பை (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) தோற்கடித்து இரண்டாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 முறை ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 2010 இல், மும்பை இந்தியன்ஸை (எம்ஐ) தோற்கடித்து முதல் ஐபிஎல் பட்டத்தை சிஎஸ்கே வென்றது. 2011-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) தோற்கடித்து சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது பட்டத்தை வென்றது.
இதன்பிறகு, 2018-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது பட்டத்தை வென்றது. 2021 ஆம் ஆண்டு கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
ALSO READ | சில சமயங்களில் வீரர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்: ராகுல் டிராவிட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR