இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு ஏற்கனவே 40 வயதாகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மார்ச் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனிலும் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது சி.எஸ்.கே. ஐபிஎல்லில் இருந்து எம்எஸ் தோனி விரைவில் விலகுவார் என்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், அவர் எப்போது விலகுவார் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. தோனி ஏற்கனவே 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மேலும் படிக்க | ப்பா.. என்ன மனுசன்யா இவரு.. 40 வயதில் தல தோனியின் FIT!
கடந்த ஆண்டு சிஎஸ்கே நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றிருந்தாலும், தோனி 16 போட்டிகளில் வெறும் 16.28 சராசரியில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக தோனி அதிக சம்பளத்தை குறைத்ததை அடுத்து, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கடைசி ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாட விரும்புவதாக தோனி தெளிவுபடுத்தியுள்ளார். “எனது கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். இது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடங்களில் என்பது எங்களுக்குத் தெரியாது”என்று சிஎஸ்கே நிகழ்வின் போது எம்எஸ் தோனி கூறினார்.
தோனியின் ஓய்வு குறித்து சி.எஸ்.கே அதிகாரி ஒருவர் கூறுகையில் "இது அவருடைய விருப்பம். அவர் எப்போது அந்த அழைப்பை எடுப்பார் என்பது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை, தோனி பல ஆண்டுகளாக விளையாடுவது முக்கியம். ஆனால் அவர் எப்போது ஓய்வு முடிவு எடுப்பார் என்பதை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை. அடுத்த சிஎஸ்கே கேப்டனைப் பற்றிய விவாதத்தை கூட சிஎஸ்கே நடத்தவில்லை. தற்போது வரை அடுத்த கேப்டனை முடிவு செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எங்களிடம் ஏராளமான வீரர்கள் உள்ளனர், தோனி ஓய்வை அறிவித்தால் மட்டுமே அதற்கான பேச்சு வரும்” என்று கூறினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: சென்னை vs கொல்கத்தா! யார் பலம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR