நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம்!

விதிமுறை மீறிய பந்துவீச்சு காரணமாக நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!

Updated: Aug 31, 2019, 06:36 PM IST
நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம்!
Image Courtesy: ICC official website

விதிமுறை மீறிய பந்துவீச்சு காரணமாக நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!

நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கேவின் பந்துவீச்சு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சுயாதீன மறு மதிப்பீடு மூலம் கண்டறியப்பட்டுள்ளது, என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சனிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச்சில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய மதிப்பீட்டில், அவரது பந்துவீச்சு பெரும்பாலானவை விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி சகிப்புத்தன்மையை மீறிவிட்டன என தெரிவித்துள்ள ஐ.சி.சி இந்த அதிரடி நடவடிக்கையினை அவர் மீது எடுத்துள்ளது.

ஐ.சி.சி சட்டவிரோத பந்துவீச்சு விதிமுறைகளின் பிரிவு 11.1-க்கு இணங்க, ரிஜ்கேவின் சர்வதேச இடைநீக்கம் அனைத்து தேசிய கிரிக்கெட் கூட்டமைப்புகளுக்கும் தங்கள் சொந்த அதிகார வரம்பில் விளையாடும் உள்நாட்டு கிரிக்கெட் நிகழ்வுகளுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒழுங்குமுறைகளின் பிரிவு 11.5-இன் படி மற்றும் கிரிக்கெட் நெதர்லாந்தின் சம்மதத்துடன், கிரிக்கெட் நெதர்லாந்தின் அனுசரணையில் விளையாடும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ரிஜ்கே பந்து வீச முடியும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெதர்லாந்தில் நடந்த ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதி 2018-ன் போது ரிஜ்கே பந்துவீச்சு மீது புகார்கள் எழுந்தது. அதைத் தொடர்ந்து நிகழ்வு குழு தனது பந்துவீச்சு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. பின்னர் ஆகஸ்ட் 13, 2019 அன்று இங்கிலாந்தின் லக்குவுபார்க் பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டை மேற்கொண்டார், அப்போது அவரது நடவடிக்கை மீண்டும் சட்டவிரோதமானது என்று கண்டறியப்பட்டது.

விதிமுறைகளின் 4.5-வது பிரிவின்படி ரிஜ்கே தனது பந்துவீச்சு நடவடிக்கையை மாற்றிய பின் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.